பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலந்த கோகிலம் - 37 வருந்திக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்த சங்கதியை யும் கேள்விப்படுவாரானால் அவருடையதுக்கமும், துன்பமும் இரட்டிக்கும். கோம ஸோமேசரே! எனக்குத் தெரியாதா இதைப் பற்றி சொல்லவும் வேண்டுமா இதை அவரிடம் தெரிவிப்பதில் இலாபம் என்ன? அவருக்கு இதனால் வியாகூலந்தான் உண்டாகும். (இருவரும் விட்டிற்குள் போகிறார்கள்./ மாத (உள்ளே வந்த வளந்தளேயனையைப் பார்த்துத் தனக்குள்/கோமளா என்ன இதற்குள் வந்து விட்டாளே இவள் ஸோமேசனுடன் போகவில்லையோ (உரக்க கோமளா குழந்தை சிசுபாலன் குளிர் காற்றில் நெடுநேரமாய் நித்திரை செய்து கொண்டிருக்கிறான். அதிகக் குளிர் உண்டாவதற்குள் இவனை எடுத்துக் கொண்டுபோய் உள்ளே படுக்கையில் விடு. வஸ (தனக்குள்) ஒகோ என்னை இவர் தன்னுடைய பணிப்பெண் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். நான் என்ன செய்வேன்! நான் இன்னாள் என்று எப்படித் தெரிவிப் பேன்! ஒருவருக்கும் தெரியாமல் நான் உள்ளே வந்ததைப் பற்றி இவர் என் மீதில் என்ன அபிப்பிராயம் கொள்வாரோ! என்ன இவருடைய பேரழகு கோமளாங்கன் என்றாலும் இவருக்கே தகும். இவருடைய தேகத்தின் அழகிற்கு ஒத்தவாறு இவருடைய குணமும் புகழத் தக்கதாய் இருக்கிறது! இவரைக் கணவனாய் அடைபவளே உண்மையில் பாக்கியசாலி. மாத என்ன? கோமளா நான் சொன்னது காதில் படவில் லையா? ஏன் பேசாமல் நிற்கிறாய்? சீக்கிரம் குழந்தையை எடுத்துக் கொண்டு போ. வஸ (தனக்குள் ஐயோ! என்னை இன்னாளென்று அறிந்து கொள்ளாமல் இவர் சொல்லுகிறாரே. நான் பிராமணர் வீட்டின் உட்புறத்தில் போகக் கூடாதவளாய் இருக்கிறேன். இதென்ன தரும சங்கடமாய் இருக்கிறது! ஈசுவரா நீதான் இந்த சமயத்தில் என் மானத்தைக் காப்பாற்ற வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/39&oldid=887557" இலிருந்து மீள்விக்கப்பட்டது