பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் மல்லி அணிந்துக் கொள்ளத் தகாத ஆபரணங்களால் என் எஜமானி அம்மாளுக்கு என்ன பிரயோஜனம்? எங்கே? நகை களைக் காட்டும்; பார்க்கலாம். சசி இதோ பார் (காட்டுகிறான்) மல்லி ; ஹா இதென்ன ஆச்சரியம் இவைகளை நான் எங்கேயோ பார்த்திருக்கிறேனே. (யோசனை செய்கிறாள்) நீர் எங்கிருந்து இவற்றை எடுத்து வந்தீர்! சசி ; அதைப் பற்றி உனக்கு என்ன கவலை? உன்னை வடை தின்னச் சொன்னார்களா? அல்லது அதில் இருக்கும் துளைகளை எண்ணச் சொன்னார்களா? கேள்வி ஒன்றும் கேட்காமல் எடுத்துக் கொண்டு போ. மல்லி : (கோபமாக) என்னிடத்தில் உமக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை, நான் மாத்திரம் உமக்குத் தேவையோ? அப்படியானால் என்னை ஏன் விரும்புகிறீர்? சசி மாதவராயரென்று ஒரு பிரபு இருக்கிறார். அவரை உனக்குத் தெரியுமா? மல்லி ; ஹா என்ன ஆச்சரியம்! வஸ் ; ஹா என்ன ஆச்சரியம்! (வளிவந்தஸேனையும் மல்லிகாவும் ஒரே சமயத்தில் மூர்ச்சிக்கிறார்கள்) சசி (மல்லிகாவைத் தாங்கி) மல்லிகா ஏன் மயங்கு கிறாய்? விழித்துக் கொள். (தனக்குள்) இவளுக்கென்னதுன்பம் சம்பவித்ததோ தெரியவில்லையே கை கால்கள் எல்லாம் துவண்டு போயின. கண்கள் பயங்கரமாய்க் காணப்படுகின்றன. அடி மல்லிகா இது தான் உன் பிரியமோ? என்னுடன் வந்துவிட நினைப்பதே இவ்வளவு பயமாய் முடிந்ததோ? மல்லி (கோபமாக என் முன் நிற்காதேயும், துன்மார்க்கரே! போய்விடும்; இதை அபகரிக்கு முன், அந்த வீட்டில் இருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/90&oldid=887669" இலிருந்து மீள்விக்கப்பட்டது