பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் மல்லி (நந்தன் சரித்திரம். 'வருகலாமோ என்ற பாட் டின் வர்ண மெட்டு) மாஞ்சி - ரூபகம் ப. தருமமாமோ? அம்மா - இந்தச் சிறுமியின் மீதுமக் கேனிந்தக் கோபமோ? அ. இருவருமோருயி ரென்னவே - என்று மிருந்ததையாயினு மெண்ணவே - உந்த மிருடா தங்கள் யான் பணிந்தெத்தினேன் தேவியே! (தரு) ச. தாயென உம்மையான் - அடைந்தேனே - நொடி தப்பாம லருகினில் இருந்தேனே. நாயென நன் றியைச் - சுரந்தேனே - என்றன் ஆவியே யுமதென - மதித்தேனே - என்ன விதியோ யென்றன்தீ மையிதாகுமோ? ஞாயமோ? (தரு) வஸ் : அப்படி ஒன்றுமில்லை எழுந்திரு மல்லிகா மனப் பூர்வமான உன்னை இவருக்குக் கொடுக்க வேண்டுமென்னும் ஆசையினாலேயே இப்படிச் சொல்லுகிறேனே யொழிய வேறு வித்தியாசமில்லை. (அன்பொழுக/ எழுந்திரம்மா! இவருடன் போய் ஸெளக்கியமாக வாழ்ந்து கொண்டிரு. என்னை மாத்திரம் உன் ஞாபகத்தில் வைத்துக் கொள். சசி : (வலத்லேனைக்கு ஸ்திரீரத்னமே உனக்கு ஈசுவரன் சகல மங்களமும் அளிக்கட்டும். அடி மல்லிகா உனக்கு சுதந் திரமும், மனைவி என்னும் மேன்மை நிலைமையும் அளித்த பேருபகாரியாகிய உன் எஜமானியை நன்றி பெருக வணங்கி விடை பெற்றுக் கொள். வஸ் பிரிய மல்லிகா சுகமாய்ப் போ! ('ஷாஜமான்' என்ற இந்துஸ்தானியின் மெட்டு) மல்லி பெண்மணி சென்று வருவேன் தல்லியே! வஸ் : கண்மணி சென்று-வருவாய் மல்லிகா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/98&oldid=887688" இலிருந்து மீள்விக்கப்பட்டது