பக்கம்:வசந்த பைரவி.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 வசந்த பைரவி மேய விட்டார் டாக்டர் ரமன். அவருக்கு என்ன ஞாபகமோ, நிமிர்ந்து விழிகளே உயர்த்தி சுநிதாவைப் பார்த்தார். அவளுடைய விழிக் கணேகள் அவர் மீது அம்பு பாய்ந்திருந்தன. பேசும் கண்களில் ஏதோ ஒரு வகைச் சுழல் ஊடாடியது. என்னவாம் அது..? எழும்பூர் வந்தது. புறப்படத் தயாராக நின்றது. துரத்துக்குடி எக்ஸ்பிரஸ். . . . . - ரிசர்வ் செய்யப்பட்டிருந்த இண்டர் வகுப் பில் சுதோ ஏறிக்கொண்டாள். அவள் கையில் டம் பப்பையும் வைத்திய சஞ்சிகையும் இருந்தன. ரமன் நீட்டிய தோல் பையைப் பெற்றுக் கொண்டாள். அவரது கை விரல் இடுக்கில் புத்தம் புதிய நூறு ரூபாய் சலவை நோட்டொன்று அவளுக்கெனக் காத் திருந்தது. சுநீதா பெரும் வியப்புக்குள்ளாள்ை. ' கைச்செலவுக்கு இது.......' என்று மட்டும் ஆங்கிலத்தில் சொல்லிப் புன்னகையுடன் அவளிடம் சமர்ப்பித்தார். மறுக்க மனமில்லாமல் வாங்கிக் கொண்டாள் சுதோ. - _" எனக்கென்னவோ வீடு செல்வதென்ரு திகிலாகவும், குழப்பமாகவும் மன 裘 கொள்கிறது...' என்ருள் அவள். "மனம் ஒரு பச்சேர்ந்தி. தினத்தால் பல மாறுபட்ட நிறம் காட்டும். இதில் திகிலுக்கோ, குழப்பத்துக்கோ பிரமேயமில்லையே!...தெ ரி.வு படுத்திக் கொண்டு சென்று வாருங்கள். விடிந்தால் திருச்சி உங்களை வரவேற்கும். உங்களை வரவேற்க உங்கள் தங்தை ஆவலே உருவாகித் தவியாய்த் தவித்துக் காத்துக் கொண்டிருப்பார். உங்கள் அத் தானும்......' ஆரம்பித்த வார்த்தைகள் சமன் முடிப்பதற். குள், சுதோ குறுக்கிட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/16&oldid=887705" இலிருந்து மீள்விக்கப்பட்டது