பக்கம்:வசந்த பைரவி.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோகினி ஒாஜிதா 2ፖ சமனுக்கு மனத்தில் பதட்டம் கண்டது. ஷோக் காரனுக்கும் அந்த அழகிக்கும் இடையே ஓர் உண்மைக் கதை திரைமறைவாக இருக்க வேண்டு மென்பதைத் திர்க்கமாக உணர்ந்தார்; வேதனை மண்டியிருந்த நெஞ்சில் கலக்கமும் கலந்து கொண் 1.து. மாற்றப்பட்ட இரவு உடையில் ரமன் ஆஸ்பத் திரியை அடைகையில், அந்த யுவதி கண்ணிர் வடித்தவாறு தலேயணேயில் சாய்ந்து கொண்டிருக் தாள். டாக்டரின் பூட்ஸ் சத்தம் கேட்டதுதான் தாமதம், அவள் படுக்கையில் படுத்துக்கொண்டாள். கண்ணிர்த் துளிகள் ஆவியாகி விட்டனவோ? டாக்டரின் முகத்தை விழிகளே உயர் த் தி ப் பார்த்தாள் அவள் - சின்னக் குழந்தை ஆதரவுடன் தாயை எப்படி எதிர்நோக்குமோ, அது மாதிரி, டாக்டரின் முகத்தில் அவள் என்ன கண்டாளோ? அவள் முகத்தில் பயம் நீங்கி, மலர்ச்சி ஏடு டாக்டருக்கு அவளுடைய புதுமை-மலர்ச்சி வியப்பைத் தந்தது. - அந்தப் பெண்ணிடம் அவ ள் வரலாற்றைக் கேட்க ஓடியது ரமனின் சிந்தன. பேச வாய் திறந்த அவருக்கு அவளுடைய பெயர் காவில் உதயமாக வில்லே, நோயாளிக் குறிப்பைப் பார்த்தார். 'மோகினி' என்றிருந்தது. உண்மையில் அவள் அப் படித்தான் காட்சியளித்தாள்-மோகினியாக - மாய: மோகினியாக ! மோகினி.' அவள் எழ முயன்ருள் இயலவில்லை. தே ய8ணயில் ஒருக்களித்தவாறு தலையைச் சாய்த்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/29&oldid=887731" இலிருந்து மீள்விக்கப்பட்டது