பக்கம்:வசந்த பைரவி.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கான் திண்டாடிப் போனேன். நாள் எழுதிய நாவல்களில் வரும் எல்லாப் பாத்திரங்களுமே தான் எனக்குப் பிடித்தவை. காக்கைக்கு குஞ்சு உயிர் அல் லவா? ஆளுல் அந்தப் பாத்திரங்களேப்பற்றி ஆராயும் போது, இன்ன பாத்திரத்தை இன்ன வகையில் செய் திருந்தால் இன்னும் சிறப்பாக ஆக்கியிருக்கலாமே என்கிற எண்ணம் உண்டாகாமற் போவதில்லே. அந்த அளவைக் கொண்டு பார்க்கும்போது, நான் இன்னும் எனக்கு மிகவும் பிடித்த பாத்திரத்தை உண்டு பண்ணவில்லே என்கிற எண்ணமே எனக்கு உண்டாகிறது. இதை அவரிடம் சொன்னேன். ஆல்ை இங்கே சொல்லவேண்டிய அவசியம் என்ன? இது பேட்டிக் கட்டுரையல்லவே, புத்தகத்தின் முகவுரைதானே என்று கேட்கலாம்.-ஆமாம். சொந்தக் குழங்தை யிடத்திலே குற்றம் காணும் தாய்க்கு அதனிடம் அன்பில்லே என்பதல்ல பொருள். அந்தக் குழந்தையிடம் காணப்படும் சின்னத் தவறு களும் இல்லையேல், அது எப்ப்டி இருக்கும் என்று எண்ணும் எண்ணம்தான் அந்தத் தாய் உள்ளத்தின் ஏற்றத்தைக் காட்டுகிறது. அவள், தன் குழந்தை மற்றக் குழந்தைகளேவிட மிகவும் உயர்ந்ததாக விளங்க வேண்டும் என்று ஆசைப் படுவதுத்ான் காரணம், இந்தத் தாய் உள்ளம்தான் எழுத்தாளனைப் புதுப்புது சிருஷ்டிகளைச் செய்யத் தூண்டுகிறது. கண்பர் திரு பூவை ஆறுமுகம் என்னிடம் வந்து இந்த நாவலுக்கு முகவுர்ை கேட்ட்போது, முக்திய தினம் கான் சென்&ன கிறிஸ்தவக் கல்லூரி மாணவர் ஒருவரோடு உரையாடியது. கினேவுக்கு வந்தது. "என் சொந்தக் குழந்தைகளிடத்திலேயே முற்றி லும் திருப்தியடையாத கான், பிறர் குழந்தையைப் பற்றி எப்படித் திருப்தியடையப் போகிறேன் ?" என்று என் உள் மனம் சொல்லியது. ஆனல் பூவை ஆறுமுகத்தைப் பார்த்தபோது, அவரது பூவத்தக் குடியையும், பூவைமாககரையும் கேரில் காண்பது போன்ற பிரினம்திட்டியது எனக்கு:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/6&oldid=887796" இலிருந்து மீள்விக்கப்பட்டது