பக்கம்:வசந்த மல்லிகா.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெண்டாட்டிப்பித்து

85

பீம : பரசுராம பாவாவின் இரண்டு கோடி ரூபாய் பெறும்படியான சொத்துகளுக்கு யார் வார்சுதாரி என்பதை அவர் நமக்கு முன்னால் கண்டுபிடித்துவிட்டார்.

ஸகா : அது யார்?

பீம : அவள்தான் மல்லிகா.

ஸகா : அப்படியா நினைக்கிறாய்?

பீம : அதுவே நிச்சயம் ஸந்தேகமே இல்லை. இவருடைய குரல் பாவனை முதலியவற்றிலிருந்து இதை நான் யூகித்துக் கொண்டேன். பரசுராம பாவா கடைசியாக எழுதிய சாஸனத்தையும் இவர் எடுத்திருக்கிறார்.

ஸகா : நீ சொல்வது அதிசயமாகவே இருக்கிறதே!

பீம : இல்லை இல்லை; நான் சொல்வதே உறுதி. அவரிடம் சாஸனம் அகப்பட்டு விட்டது. இந்தப் பெண்ணே அதற்கு வார்சுதாரி என்பதையும் அவர் கண்டுபிடித்திருக்கிறார். அவர் புத்திவானாதலால் படத்துக்கும் அவளுக்குமுள்ள ஒற்றுமையிலிருந்து, மர்மத்தைக் கண்டுகொண்டார். தமது வசத்தில் வந்த ஐசுவரியத்தைத் திருப்பிக் கொடுக்காமல் தாமே வைத்துக் கொள்வதற்கு இதுவே சரியான வழியென்று யோசனை செய்து, அவளைக் கலியாணம் செய்து கொள்ளத் தீர்மானித்து விட்டார். அவளை ரகஸியமாக அழைத்துக்கொண்டு ஓடி வந்தார். எண்ணம் முடிவடையும் சமயத்தில் ஏதோ இடைஞ்சல் வந்துவிட்டது - என்று கூறி ஏளனமாக நகைத்தான்.

ஸகா : சரி: அதெல்லாம் இருக்கட்டும் நாம் இப்போது என்ன செய்யலாம்? ஒரு யோசனை சொல் பார்ப்போம்.

பீம : அந்தப் பெண்ணை எப்படியாவது கண்டுபிடித்து அழைத்துக்கொண்டு வந்து அவளை நான் கலியாணம்செய்து கொண்டால், நம்முடைய எண்ணம் பலித்துப் போகும். வேறு யோசனை என்ன?

ஸகா : நீ அவளைக் கலியாணம் செய்து கொள்ளுகிறதா? உனக்குப் பைத்தியமோ?

பீம : பைத்தியமென்ன? அவள் இந்த ரகஸியத்தை அறிந்திருக்க மாட்டாள். அவளை நான் எப்படியாவது கண்டுபிடித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/103&oldid=1231399" இலிருந்து மீள்விக்கப்பட்டது