பக்கம்:வசந்த மல்லிகா.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

வஸந்தமல்லிகா

என்ற ஒரு நினைவு அவரது மனதில் உண்டாயிற்று. சில நிமிஷங்களில் அந்த நினைவு உறுதிபட, அவர் அவ்விதமே செய்யத் தொடங்கி, வீட்டை விட்டுப் புறப்பட்டு வேகமாய் நடந்து அரண்மனைத் தோட்டத்திலுள்ள நாடகக் கொட்டகையை அடைந்தார். கொட்டகையின் வாசலில் இருந்த ஒருவன், "உள்ளே நிற்பதற்குக் கூட இடமில்லையே" என்று சொல்ல, "இன்றைக்கென்ன இவ்வளவு கூட்டம்?" என்றார் மோகனராவ். "ஆகா! இன்றைக்கு ஸஞ்சலாட்சி நடிப்பதைப்போல, இது வரையில் எவரும் நடித்ததும் இல்லை , இனி நடிக்கப் போவதும் இல்லை. அவ்வளவு சுகமாய் இருக்கிறது! அவளைப் பார்க்காத கண்களும் கண்களா?" என்றான் அங்கிருந்த வேறொரு மனிதன்.

அதைக் கேட்ட மோகனராவுக்கு உள்ளே போகவேண்டும் என்ற ஆவல் அதிகரித்தது. "எப்படியாகிலும் வழி செய்து கொண்டு போய்ப் பார்க்கிறேன்" என்று சொல்லிவிட்டு உள்ளே நுழைந்து நாற்காலிகள் இருந்த இடத்திற்குப் போய்ச் சேர்ந்தார். எவ்விடத்திலும் நிற்பதற்குக் கூட இடம் இல்லாதிருந்தது. ஆயினும், ஒரு நாற்காலி மாத்திரம் காலியாக இருந்தது. அதைப் பார்த்த மோகனராவ் அதில் உட்காரும் எண்ணத்துடன் அதற்கருகில் சென்றார். அதன் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் மோகன ராவுக்கு அறிமுகமானவர். காலியாயிருந்த நாற்காலியில் பீமராவ் உட்கார்ந்திருந்ததாயும், அப்போதே அவர் எழுந்து வெளியிற் போனதாயும் அவர் தெரிவித்தார். "அப்படியானால் நல்லதுதான்; இதில் நான் உட்காருகிறேன்; அவன் வந்தால் நிற்கட்டும்" என்று சொல்லிக்கொண்டே உட்கார்ந்தார் மோகனராவ்.

அந்தச் சமயத்தில் சதாரத்தின் கணவன் ஆணுடைகள் குதிரைகள் முதலியவற்றுடன் வந்தான். சதாரத்தைக் காணாமையால் அவன் அவ்விடத்தில் படுத்து நித்திரை செய்ய, அந்தச் சமயத்தில் திருடன் வந்து நிரம்பவும் வேடிக்கையாக நடித்தான். பிறகு மேன் மாடத்தில் சதாரம் மிகுந்த விசனக்குறியுடன் உட்கார்ந்திருப்பதாகக் காட்டினார்கள். அவள் தனது கணவன் கீழே வந்திருக்க மாட்டானென்றும், சிறிது நேரங் கழித்து கீழே இறங்கலாம் என்றும் சொல்லிவிட்டு உட்கார்ந்தாள்.

அவளைக் கண்ட மோகனராவின் மன நிலைமையை விவரித்தல் கூடாத காரியம். தனது படத்திலிருந்த ஸ்திரீயே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/178&oldid=1233846" இலிருந்து மீள்விக்கப்பட்டது