பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

வஞ்சிமாநகரம்



ஆனால் கொடுங்கோளுர் நகரெங்கும் அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததையும், அதை அதே இரவில் நகர் பரிசோதனைக்காக வந்திருந்த அமைச்சர் அழும்பில்வேள் அறிந்து சென்றதையும் பற்றிப் பரபரப்பாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். இரத்தின வணிகர் வீட்டில் தானே நேரிற்சென்று இச்செய்திபற்றி அறிய குமரன்நம்பி கூசினான். ஆனால் இரத்தின வணிகரின் வீட்டிலும் அதற்குரிய சோகம் பரவியிருப்பதாகவே மற்றவர்கள் மூலம் அவன் கேள்விப்பட்டறிய முடிந்தது. இப்போது வீரர்கள் திரும்பத் திரும்ப அவனைக் கேள்விகளால் துளைக்கத் தொடங்கினர். எனவே அவன் தன் மனத்தில் ஏற்பட்ட சந்தேகத்தைக் கூற வேண்டியதாயிற்று. கப்பலில் கடம்பர்கள் பேசிக்கொண்டிருந்ததை ஒட்டுக் கேட்டதிலிருந்து அமுதவல்லி காணாமற் போன இரவில் அவர்கள் பொன்வானி முகத்துவாரத்தின் வழி வந்து திரும்பியிருக்கிறார்கள் என்றே தெரிந்தது. தான் கொள்ளைக் கப்பலில் ஒட்டுக்கேட்டறிந்த செய்தியைக் கூறாமலே, “அமுதவல்லி கொள்ளைக்காரர்களான கடம்பர்களிடம் சிறைப்பட்டிருப்பது சாத்தியமென உங்களுக்குத் தோன்றுகிறதா?” என்று தன் நண்பர்களான படைக்கோட்டத்து வீரர்களிடம் கேட்டான் குமரன் நம்பி.

“சாத்தியமென்று தோன்றவில்லைதான் படைத்தலைவரே. ஆனால் சாத்தியமில்லை என்றும் எப்படி மறுப்பது?” என்றே அவர்களிடமிருந்து மறுமொழி கிடைத்தது.

அதன்பின் அந்த வினாவுக்கு விடை காண்பதை விடுத்து முற்றுகையிட்டிருக்கும் கொள்ளைக்காரர்களின் மரக்கலங்களை விரட்டியடிப்பது எவ்வாறு என்பதையும் அவர்களிடமிருந்த இரத்தின் வணிகரின் மகள் அமுதவல்லியை மீட்பது எவ்வாறு என்பதைப் பற்றியுமே படைக்கோட்டத்து வீரர்களோடு அவன் கலந்தாலோசிக்க வேண்டியிருந்தது. பல கொள்ளைமரக் கலங்களில் முற்றுகையிட்டிருக்கும் எண்ணிக்கை நிறைந்து முரட்டுக் கொள்ளைக்காரர்களோடு சில வீரர்களைக் கொண்டு