பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

47



கட்டிவிடக்கூடாது. அவ்வாறு கட்டினால் ஒருவேளை நமது நோக்கமே பாழானாலும் ஆகிவிடலாம். கவனமாக அரைவாசி மரக்கலங்களின் கொடி மரங்களில் நம் கொடிகளை ஏற்றி மாற்றிவிட்டு மீதி அரை வாசி மரக்கலங்களில் கடம்பர்களின் கொடிகளே பறக்கும்படி விட்டுவிட வேண்டும்.”

இந்த இடத்தில் குமரன் நம்பியின் பேச்சில் குறுக்கிட்டு வீரனொருவன் கேள்வி கேட்டான்.

“அவ்வாறு சில கொடிகளை மட்டும் மாற்றிவிட்டுச் சில கொடிகளை அப்படியே விடுவதனால் நம்முடைய எந்த நோக்கம் நிறைவேறும்?”

"கடம்பர்களே தங்களுக்குள் ஒருவர்மேல் ஒருவர் சந்தேகப்பட்டு அடித்துக்கொண்டு சாவார்கள். சூழ்ச்சிகளில் இது மித்திர பேதமாகும்.”

“இந்த மித்திரபேதம் நாம் திட்டமிடுகிறபடி மித்திர பேதமாகாமல் அவர்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு கொடிகளை மாற்றியது பிறர் சூழ்ச்சியாக இருக்கலாம் என்று எண்ணுவார்களானால் என்ன ஆகும்?”

“பெரும்பாலும் இந்த மித்திர பேதம் பலிக்குமென்று நம்பித்தான் தொடங்குகிறோம் விடிந்ததும் அருகருகே நிற்கும் கப்பல்களில் மாற்றார் கொடிகளைப் பார்த்தால் அந்தக் கப்பல்களைத் தாக்கத் தோன்றுவதுதான் இயல்பு” என்றான் குமரன் நம்பி.

படைக்கோட்டத்து வீரர்கள் அதற்கு மேலும் தங்கள் தலைவனைக் கேள்வி கேட்டு விவாதிக்க விரும்பவில்லை. எல்லாரும் புறப்பட்டனர். இருளில் படகுகள் விரைந்தன. படகுகள் நதி முகத்துவாரத்தைக் கடந்து பெருங்கடலில் துழைந்ததும் முதல் வேலையாக எல்லோரும் தீப்பந்தங்களை அனைத்துவிட்டார்கள். கொள்ளை மரக்கலங்கள் முற்றுகை