பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

79



துணையாகச் சில கடம்பர்களையும் இங்கே அனுப்பி வைக்காமல் எல்லா வீரர்களுடனும் தானே புறப்பட்டுவிட்டால் என்ன செய்வது?

“அப்படி நடக்காது, அநேகமாக ஒலையில் எழுதியிருக்கிறபடிதான் அவன் செய்வான். செய்யாமல் அவனே எல்லாரோடும் புறப்பட்டு வருவானாயினும் கவலை இல்லை. அப்படி வரும் போது - நம்மவரும், நீயுமுள்ள படகுகள் பொன்வானியாறு வழியே முன்னால் வருமாறு கவனித்துக்கொள். நானும் வீரர்களும் பொன்வானியாற்றின் இரு மருங்கிலுமுள்ள புதர்களில், மறைந்திருப்போம். எங்களுடைய சாதுரியமான போரினால் உங்களை மீட்டுக் கடம்பர்களை அழிப்போம். ஆந்தைக்கண்ணன் வராமல் ஒலையில் எழுதியிருக்கிறபடி கடம்பர்களையும் சிறைப்பட்டிருக்கும் கொடுங்கோளூர் வீரர்களையும் மட்டுமே உன்னோடு அனுப்பி வைப்பானாயின் எங்களுக்கு ஒரு கவலையும் இல்லை. உங்களோடு வரும் கடம்பர்களைப் பொன்வானி முகத்துவார வழியிலேயே கொன்றோ, சிறைப்பிடித்தோ உங்களனைவரையும் அவர்களிடமிருந்து மீட்டு விடுவோம்.”

“எல்லாம் நல்லது. ஆனால் என்னைத் திருப்பி அனுப்பாமல் அங்கே வைத்துக்கொண்டு, கடம்பர்களையும் கொடுங்கோளூர் வீரர்களையும் மட்டும் படகுகளில், அனுப்பிவிட்டால் என்ன செய்வது?”

“செய்வதென்ன? எப்படியேனும் சாமர்த்தியமாகத் தப்ப முயற்சி செய்தே ஆகவேண்டும்.”

“அதுவும் முடியாது. - நான் ஊமையும் செவிடுமாகவே இறுதிவரை நடிக்கவேண்டும்” எனச் சொன்னான்.

ஆந்தைக்கண்ணன் ஒலையைப் படித்து - உடன் அதைக் கொண்டு வந்தவனையும் சிறைப்பிடித்து - ஏற்கெனவே சிறைப் பட்டிருந்த பிற கொடுங்கோளுர் வீரர்களோடு வைத்துக்