பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/98

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

வஞ்சிமாநகரம்



நான் தங்கள் கட்டளையைச் செய்யக் கடமைப் பட்டவன். எனக்குக் கட்டளையிடுங்கள்...” என்று அவன் குழைந்ததைப் பார்த்து அமைச்சர் அழும்பில் வேள் அவனையே உற்றுப் பார்த்தார். அவர் கண்கள் அவனை ஊடுருவின.


17. அமுதவல்லியைத் தேடி...

நீண்ட நேரம் அவன்முகத்தையே உற்றுப் பார்த்துவிட்டு பின்பு ஒலையை அவனுக்குப் படித்துக் காட்டினார் அமைச்சர் அழும்பில் வேள். ஒலையிலிருந்து குயிலாலுவப் போரில் சேரநாட்டுப் படைகளுக்கு வெற்றிமேல் வெற்றி கிடைத்துக் கொண்டிருப்பதாகவும் - விரைவில் மன்னரும், படைகளும் தலைநகருக்குத் திரும்பக்கூடும் என்றும் தெரிந்தது.

“இந்தச் செய்தியை எனக்கு அறிவிப்பதற்காகவா இவ்வளவு விரைந்து என்னை வரவழைத்தீர்கள்? இதைத் தாங்கள் அறிய வேண்டியது அவசியந்தான். நான் அறிந்து ஆகப்போவது என்ன?” என்று குமரன் நம்பி வினாவியபோது அமைச்சர் அழும்பில்வேள் மறுமொழி ஏதும் கூறாமல் புன்முறுவல் பூத்தார்.

இந்தப் புன்முறுவல் படைத்தலைவனின் சினத்தைக் கிளறச் செய்தது. கொடுங்கோளுரில் தான் விரைந்து செய்ய வேண்டிய பணிகள் இருக்கும்போது - தன்னைக் காரணமின்றி வஞ்சிமா நகரத்திற்கு வரவழைத்த அமைச்சர் பெருமான் மேல் கோபம் கோபமாக வந்தது அவனுக்கு. அவனுடைய அந்த நேரத்து மனநிலையை உணர்ந்தவர்போல் அமைச்சர் கூறத் தொடங்கினார்.

“இந்த விநாடியில் உன் மனம் என்மேல் எவ்வளவு ஆத்திரம் கொண்டிருக்கிறது என்பதை நான் நன்கு அறிவேன் குமரா ! பேரரசரும் படைத்தலைவர்களும் திரும்பி வருவதற்குள்ளாவது கடற்கொள்ளைக்காரர்களிடமிருந்து நகரத்தைக் காப்பாற்றி