பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 வஞ்சி மூதூர் நம் பாராளுமன்றம், மற்றும் சட்டமன்றங்களுக்கும். அவற்றின் உறுப்பினர்களுக்கும், அவற்றின் குழுக்களுக்கும் தம் அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் அதிகாரம், உரிமை சட்டக் காப்புரிமை முறையை வகுத்துக்கூறும் அரசியல் சட்டத்தின் 105 மற்றும் 194 பிரிவுகளின் 3-ஆம் பகுதியில் இவற்றில் கூறப்படாத அதிகாரம், உரிமைகள் தேவைப்படும் போதெல்லாம், உரிய சட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அதுவரை இங்கிலாந்து நாட்டுப் பாராளுமன்றத் து. மக்களவை விதிகளே பின்பற்றப்படி வேண்டும் என வரை யறுத்து வைத்தார்கள், அரசியல் சட்டத்தை வகுத்துத் தந்த, ஆன்றோர்கள். இந்தியப் பாராளுமன்ற நடைமுறைக்கு வழிகாட்டியாக மேற்கொள்ள வேண்டிய ஒன்று என அரசியல் நிர்ணய சபை ஆன்றோர்களால் மதிக்கப்பட்ட, இங்கிலாந்து நாட்டு பாராளுமன்றத்தின் வழிகாட்டி நூல், திருவாளர். எர்ஸ்கின் மே என்பார் எழுதிய “பாராளுமன்றத்தின் சட்டம், உரிமை கன், நடைமுறைகள், பழக்க வழக்கங்கள்” (Erskine Mays Treaitse on the Law, Privileges, proceedings and usage of parliament) orsion (ET sumé5th. அந்நூல், பாராளுமன்ற நிகழ்ச்சிகளில் உறுப்பினர்கள் பங்கு கொள்ள ளேண்டிய உரிமை குறித்துப் பின்வருமாறு: கூறுகிறது. - 'ஓர் உறுப்பினரை, அவையிலிருந்து வெளியேற்றும் ஆணை பிறப்பிப்பதற்கு முன்னர், அப்போது அவ் உறுப்பினர் அவைக்கு வராதிருந்தால், அவைக்கு வந்து, அவர் இருக்கை யில் இருந்து, தன்னுடைய முறையிட்டினை எடுத்துக் கூற வாய்ப்பு அளிக்கும் வகையில் அவைக்கு வருமாறு உத்தரவு: பிறப்பிப்பது வழக்கமாகும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/105&oldid=888796" இலிருந்து மீள்விக்கப்பட்டது