பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92. வஞ்சி மூதுார் தடந்து கொள்ளும் மாணவனே தலையாய மாணவனாவன். அவன் ஒருவனால் மட்டுமே அறிவுச் செல்வத்தை முழுமை. யாகப் பெற இயலும். "உடையார்முன் இல்லார்போல் ஏக்க ற்றும் கற்றார் கடையரே நல்லா தவர்' என்பது வள்ளுவர் வாக்கு! கற்ற கல்வியும் பெற்ற பேரறிவும், கற்ற ஒருவனை மட்டும் வாழவைக்குமளவே அமைந்துவிடுதல் கூடாது. "தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது’ என்றார் வள்ளுவர். அந்த அறிவு ஊருக்கு உதவ வேண்டும்: தாட்டிற்கு உதவ வேண்டும், ஏன் உலகிற்கே உதவ. வேண்டும். 'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்’ 'இறவாத புகழுடைய புதுநூல்கள் - தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்’ "தாயெழிற் றமிழை, என்றன் தமிழரின் கவிதை தன்னை ஆயிரம் மொழியிற் காண இப்புவி அவாவிற் றென்ற தோயுறும் மதுவின் ஆறு தொடர்ந்தென்றன் செவியில் வந்து பாயுநாள் எந்த தாளோ ஆரிதைப் பகர்வார் இங்கே?' என பாரதியும் பாரதிதாசனும் காட்டிய வழிச்சென்று பணியாற்றி வீட்டிற்கும் நாட்டிற்கும் புகழ் ஈட்டித் தருதல் வேண்டும். . . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/88&oldid=889024" இலிருந்து மீள்விக்கப்பட்டது