பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டம் கடிநகர் புருடோத்தமன் 87

யாட்டுகளைப் புரிந்தவன் (7); துவரையை அரசாண்ட பொழுது பாண்டவர்க்குத் துணையாக நின்று கெளரவர் களை அழியச்செய்து பாண்டவர்கட்கு அரசைக் கொடுத் தருளியவன் (8); வடமதுரை, சாளக்கிராமம், வைகுந்தம், துவாரகை, அயோத்தி, பதரி ஆகிய இடங்களில் திருக் கோயில் கொண்டு எழுந்தருளி யிருப்பவன் (9).

இங்ஙனம் திருப்பாசுரங்களில் ஈடுபட்டு திவ்விய தேசத்தையும், திவ்விய தேச எம்பெருமானையும் அநுசந் திக்கும் நிலையில் திவ்விய கவியின் பாசுரம் நினைவிற்கு வர, அதனையும் ஓதி உளங் கரைகின்றோம்.

‘மத்தால் கடல்கடைந்து

வானோர்க்கு அமுதுஅளித்த அத்தா! எனக்குஉன்

அடிப்போதில்-புத்தமுதை கங்கைக் கரைசேரும்

கண்டத்தாய்! புண்டரிக மங்கைக் கரசே வழங்கு.”* (மத்து - மந்தரை மலை; வானோர் - தேவர்கள் அத்தா - தலைவனே; போது - மலர்; கண்டம் - திருப்பதியின் திருநாமம்; புண்டரிகம் - தாமரை, புண்டரிக மங்கை - பெரிய பிராட்டியார்.1 இதில் அய்யங்கார் எம்பெருமானை நோக்கி, அதில் திரு வடித் தாமரைகளின் பெருமையை அநுபவிக்கத்தக்க நல் லறிவினை வழங்குமாறு வேண்டுகின்றார். அவை தேனே மலருந் திருப்பாதங்களாதலால் அவற்றில் போக்கியதை விஞ்சியிருக்கும் என்பது குறிப்பு. ‘"சமயம் வந்தபோது பயனைக் கருதி உன்னை வணங்கி நின்ற தேவர்கட்கு பாற்கடலைக் வருந்திக் கடைந்து அதனின்றும் எழுந்த

5. நூற். திருப். அந்-102