பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. திருப்பிரிதி எம்பெருமான்

மோட்சத்தை அடைய வி ரு ம் பு கி ன் ற வ ன், அதாவது முமுட்சு, திருமந்திரம் துவயம் சரம சுலோகம் ஆகிய மூன்று மந்திரங்களையும் அறிதல் வேண்டும். இவற்றுள் முதலாவதாகத் தெரிந்து கொள்ள வேண்டியது திருமந்திரமாகும். இம்மந்திரத்திற்குப் பொருளான நாராயணனைக் காட்டிலும் அவனைக் குறிக்கும் திருநாமத்தின் மேன்மை உயர்ந்ததாகும். இந் நாமத்திற்குரியவனாகச் சொல்லப்பெறும் எம்பெருமான் அருகிலில்லாமல் தொலைவிலிருப்பினும் அவனைப்பற்றிச் சொல்லுகின்ற இத்திருநாமம் அருகிலிருந்து தன்னைப் பக்தியுடன் சொன்னவர்களுடைய விருப்பங்களை முற்றுப் பெறச் செய்யும். ‘திரெளபதிக்கு ஆபத்திலே புடவை சுரந்தது திருநாமமிறே” என்பது முமுட்சுப்படி. இம் மந்திரம் அவரவர் விரும்பியவற்றைத் தரும் பெருமை யுடையது. பாகவதருக்குக் ததியாராதனம் செய்தற் பொருட்டு வழிப்பறிக் கொள்கையை மேற்கொண்டிருந்த திருமங்கையாழ்வார் முன் திருவாலி மணவாளன் தோன்றி அவர் செவியில் இத் திருமந்திரத்தைச் சாதித்த போது,

“குலந்தரும் செல்வம் தந்திடும்; அடியார்

படுதுய ராயின எல்லாம் நிலந்தரஞ் செய்யும்; நீள்விசும்பு அருளும்

அருளொடு பெருநிலம் அளிக்கும்;

1. மூமுட்சு - 16.