பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை

(ஜஸ்டிஸ் எஸ். சூரியமூர்த்தி)

திருமந்திரப் பொருளுக்கு எல்லை நிலங்களாக இருப்பவை அர்ச்சாவதார எம்பெருமான்கள் எழுந்தருளி யிருக்கும் திவ்விய தேசங்களாகும். இங்கு எம்பெருமான் தன்னுடைய சுவாமித்துவத்தையும் செளலப்பியத்தையும் புலப்படுத்திக் கொண்டு, அடியவர்கள் தம் உடம்பினால் கைங்கரியம் செய்து மகிழ்வதற்குப் பாங்காக எழுந்தருளி யுள்ளான். வைணவர்கள் இவற்றை 108 என்று கணக் கிட்டுள்ளார்கள். இவற்றுள் சோழ நாட்டிலுள்ளவை 40; பாண்டிய நாட்டிலுள்ளவை 18; மலைநாட்டிலுள்ளவை 13; நடுநாட்டிலுள்ளவை 2; தொண்டை நாட்டி லுள்ளவை 22: வடநாட்டிலுள்ளவை 12; திருநாடு ஒன்று. இந்தக் கணக்கைப் பிள்ளைப் பெருமாள் அய்யங் காரின்,

ஈரிருப தாம்சோழம்;

ஈரொன்ப தாம்பாண்டி, ஒர்பதின்மூன் றாம்மலைநா(டு); ஒரிரண்டாம்-சீர் நடுநாடு; ஆறோடு ஈரெட்டுத்தொண்டை

அவ்வடநா(டு) ஆறிரண்டு; கூறுஇரு நா(டு)ஒன்றாக்

கொள். என்ற வெண்பாவால் அறியலாம், இந்த வடநாட்டுத் திருப்பதிகட்கு நம்மை இட்டுச் செல்லுகின்றார் பேராசிரி யர் டாக்டர் ந. சுப்பு ரெட்டியார் இந்த நூலின் மூலமாக,