பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

tot} வடநாட்டுத் திருப்பதிகள்

வலந்தரும்; மற்றும் தந்திடும்; பெற்ற

தாயினும் ஆயின செய்யும்; கலந்தரும் சொல்லை நான்கண்டு கொண்டேன்


நாராயணா என்றும் நாமம்

என்று சொல்லிப் போற்றுவர்.

நாராயண மந்திரத்தை அநுசந்திப்பவர்க்கு யாவரும் போற்றும் சேடித்துவ ஞானமாகிய உயர்ந்த குலத்தை நல்கும்; அக்குலத்திற்கேற்ற கைங்கரியமாகிற பெருஞ் செல்வத்தை அளிக்கும்; அடியவர்கள் அநுபவிக்கின்ற துக்கம் என்னும் பெயரையுடைய எல்லாவற்றையும் தரை மட்டமாக்கும்; கைங்கரியத்திற்கு இடையீடின்றி மேன் மேலும் வளர்ந்தோங்கச் செய்யும் பரமபதத்தைக் கொடுக்கும்; இங்ஙனம் பரமபதத்தைக் கொடுத்தலேயன்றி தன் கருணையால் தன்னை அநுபவித்தால் ஏற்படும் பேரானந்தத்தில் திளைக்கச் செய்யும்; தான் செய்யும் கைங்கரியத்திற்குத் தானே கருத்தா என்றும், அதை அநுப விப்பவன் என்றும் நினையாமலிருத்தலாகிய வன்மையை யும் சேஷத்துவ சொரூபத்திற்கேற்ற மற்ற நன்மைகளை யும் தரும்: பெற்ற தாயைக் காட்டிலும் பல நன்மை களைப் புரியும் என்பதை அறிகின்றோம். திருமந்திரத்தின் பொருளுக்கு எல்லை நிலமாக இருப்பவை அர்ச்சை உருவ எப்பெருமான்கள் எழுந்தருளியிருக்கும் திவ்விய தேசங் களாகும். எம்பெருமான் சர்வ சுவாமி என்பதும், சர்வ சுலபன் என்பதும் திருமந்திரத்தின் தேர்ந்த பொரு ளாகும். அடியவர்கள் இவ்வுடம்பினால் அடிமை செய்து மகிழும்படிக்குப் பாங்காக எம்பெருமான் தன்னுடைய சுவாமித்துவத்தையும் செளலப்பியத்தையும் வெளிப் படுத்திக்கொண்டு இத்திருத்தலங்களில் எழுந்தருளி யுள்ளானாகையால், இத்தலங்கள் தி ரு ம ந் தி ர ப்

2. பெ. திரு. 1.1 . 9