பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பிரிதி எம்பெருமான் 9 I

பொருளுக்கு எல்லை நிலங்களாயிற்று. இப்படிப்பட்ட திருத்தலங்களை ஏனைய ஆழ்வார்கள் அநுபவித்தார்க ளெனினும், திவ்விய தேசாதுபவமே திருத்தலப் பயண மாகக் கொண்டவர் திருமங்கையாழ்வார் ஒருவரே ff@HITT

இமய மலையிலுள்ள திருப்பதிகளை முதலில் அதுப விக்கத் திருவுளங்கொண்டு முதன் முதலாகத் திருப் பிரிதிக்கு வருகின்றார். இத்திவ்விய தேசம் பதரிகாச்ரமம் என்னும் திருப்பதிக்குச் செல்லும் வழியிலுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரத்திலுள்ள இத் திருத்தலம் ஹரித்துவாரத்திலிருந்து 200 கி. மீ. தொலைவி லுள்ளது. இது ஜோசிமடம்-நந்தப் பிரயானை என வழங்கப் பெறுகின்றது. இங்குத்தான் அழகாநந்தா, மந்தாகினி என்ற இரண்டு நதிகள் ஒன்று சேர்கின்றன. நந்தர் என்ற மாமன்னர் இங்குப் பல வேள்விகள் இயற்றியதாகவும், அதன் நினைவாகத் தம் பெயரை இட்டதாகவும் சொல்லப் பெறுகின்றது. இந்த இடத்தில் கன்வ முனிவர் இருந்ததாகவும், துஷ்யந்தன் சகுந்தலையை இங்குத்தான் திருமணம் புரிந்து ககாண்டதாகவும் செவி வழிச் செய்திகள் வழங்கி வருகின்றன. குளிர்காலத்தில் பதரி நாராயணன் திருக்கோயில் மூடப் பெறுங்கால் அங்குள்ள உற்சவர் இங்கு வந்து ஆறு திங்கள் தங்கி வழி பாடுகளைப் பெறுவர். இங்குள்ள சங்கர மடத்தில் நரசிம்ம சாலிக்கிராமம் உள்ளது; திருத்தலப் பயணிகள் இதனை வழிபடுவர். திருமங்கையாழ்வார் இத் திருத் தலத்தை ஒரு திருமொழியில் அநுபவித்து மகிழ்கின்றார். ஒவ்வொரு பாசுரமும் திருத்தல வருணனையும் அங்குக் கோயில் கொண்டுள்ள எம்பெருமானையும் கூறுகின்றது. எடுத்துக்காட்டாக ஒன்றினைக் காட்டுவோம்.

AASAASAASAASAASAASAASAA

3. பெரி. திரு.1-2.