பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. வடமதுரைப் பிறந்த மாயன்

‘மகா பாரதத்தால் தூது போனவன் ஏற்றம்

சொல்லுகிறது என்பது பூர்வசன பூஷணத்தில் ஒரு வாக்கியம். இதனைச் சிந்திக்கின்றோம். இங்கு சர்வே சுவரன் என்று சொல்லாமல் தூதுபோனவன்” என்று கூறியதால் அவன் அடியார்களுக்குப் பரதந்தரப் பட்டி ருக்கும் தன்மை தெளிவாகின்றது. தேவதேவனான தன்னுடைய பெருமையையும் செய்கின்ற தொழிலின் சிறுமையையும் பாராமல் பாண்டவர்களுக்காகக் கழுத் திலே ஓலை கட்டித் துனது போனமை அடியார்க்குப் பரதந்தரனாய் இருக்கும் தன்மையில் உள்ள ருசி'க்கு வசப்பட்டிருந்தமையாலன்றோ, அடியார்களுக்குப் பரதந் தரனாக இருக்கும் இத்தன்மைதான் அவனை அடைவ தில் உள்ள எளிமையை காட்டுகின்றது. எம்பெருமானின் இந்த எளிமைக் குணத்தின் மேன்மையில் தன் உள்ளத் தைப் பறிகொடுத்த திருமங்கையாழ்வாரும்,

‘பெருநிலத்தார்,

இன்னார் தூதன் எனநின்றான்”

கோதுஇல் செங்கோல்

குடைமன்னர் இடைகடந்த

துதா’’ என்று பெருமையுடன் பேசுகின்றார். இச்சை காரண மாக எம்பெருமான் தன்னடியார்கள் திறத்தில் சேய்யும்

1. ஸ்ரீவச. பூஷ-6 (புருடோத்தம நாயுடு பதிப்பு) 2. பெரி. திரு. 2, 2:3 8. . 6, 2:8

33–7