பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடமதுரைப் பிறந்த மாயன் 103

இருக்கும் என்று சொல்லுகின்றனர். மலையின் இருபுறங் களிலும் சிற்றுார்களும் வேளாண்மைக்குரிய நிலபுலங்களும் காணப்பெறுகின்றன. வல்லபாச்சாரியார் மலையை வழி பட்டார் என்பது செவிவழிச்செய்தியாகும். ‘திருவேங்கட மாமலை ஒன்றுமே தொழ நம் வினை ஒயுமே” என்று நம்மாழ்வார் கூறியுள்ளதை ஈண்டு நாம் சிந்திக் கின்றோம். வல்லபர் இந்தக் குன்றின்மீது ஸ்ரீநாதர் கோயிலை எழுப்பினார் என்றும், இஸ்லாமியர்களிட மிருந்து பாதுகாத்தற் பொருட்டு இதிலிருந்த இறைவன் திருமேனியை உதயபூர் அரசு எடுத்துச் சென்றதாகவும் கூறுகின்றனர். திருப்பதி மலைக்கோயிலைப்போலல்ே இக்குன்றின் மீதுள்ள கோயிலும் செல்வச் செழிப்புள்ளது. ஏராளமான திருத்தலப் பயணிகள் வந்து போகின்றனர்; காணிக்கை செலுத்துகின்றனர். குன்றினையும் வலம் வருகின்றனர்.

மலையடிவாரத்தில் இலக்குமி நாராயணர் கோயில் ஒன்று உள்ளது. இராமாநுசர் சம்பிரதாயப்படி வழிபாடு நடைபெறுகின்றது. இதனைத் தவிர அரிதேவர் கோவில் ஒன்று உள்ளது. இப்பகுதியிலுள்ள திருக்கோயில்களில் இது மிகப் பழமையானது. செந்நிறக் கற்களால் கட்டப் பெற்றுள்ளது. அக்பர் ஆட்சிக் காலத்தில் கட்டப் பெற்றிருக்கலாம் என்று தோன் று கி றது . இதன் அருகிலுள்ள திருக்குளம் ஒர் ஆறுபோல் மிக நீண்டது: மிகவும் ஆழமானது. இதில் எப்பொழுதும் நீர் இருக்கும். இதன் நாலாபுறங்களிலும் படிக்கட்டுகள் உள்ளன.

கோவர்த்தனத்தைப் பெரியாழ்வார், ஆண்டாள். நம்மாழ்வார் ஆகிய ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய் துள்ளனர். கண்ணன் திருவாய்ப்பாடியில் இருந்த போழுது ஆயர்கள் வழக்கப்படி இந்திர வழிபாட்டுக்

17. திருவாய். 3 . 3 : 8,