பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடமதுரைப் பிறந்த மாயன் 105

களால் குத்துகின்றது; இதனால் ஒரு கொம்பு முறிந்து படு கின்றது. கொம்பு முறிந்த புண்வாயில் மதநீர் ஒழுகு கின்றது. தன் துதிக்கையை உயரத் துக்கி அண்ணாந்து நிற்கும்பொழுது வானத்தில் காணப்பெற்ற இளம்பிறைச் சந்திரனைத் தான் இழந்த கொம்பாக மயங்கி அதனைப் பறித்துக்கொள்ள விருப்புகின்றது(5). மலையிலுள்ள பெண் யானை யொன்று தன் குட்டியை ஒரு சிங்கக் குட்டி நலியும்பொருட்டுச் சீறினபோது, தன் குட்டியைத் தனது நான்கு கால்களினுள்ளே அடக்கி மறைத்துக்கொண்டு, அச்சிங்கக் குட்டியை எதிர்த்துப் போர் புரிகின்றது(2). கொல்தும் வாயையுடைய சினங்கொண்ட புலிகள், முனிவர்கள் வாழும் தழைக்குடில்களில் சென்று புக, முனிவர்கள் அப்புலிகளின் கழுத்தைச் சொறிந்து அவற்றை நின்றபடியே உறங்கச் செய்கின்றனர் (5). மலையிலுள்ள சில பெண் குரங்குகள் இலங்கையின்மீது பாய்ந்து அதன் சீர்கெடும்படி அழித்த சிறிய திருவடியின் புகழ் பாடித் தம் குட்டிகளை தம் அங்கையில் கொண்டு சீராட்டிக் கண்வளரச் செய்கின்றன (7). முசு என்ற ஒரு வகைச் சாதிக் குரங்குகள் தமது குட்டிகளைத் தம் முதுகில் கட்டிக் கொண்டுபோய் ஒரு மரக்கிளையினின்றும் மற்றொரு மரக்கிளைக்குத் தாவிக் குதித்தலைப் பாழாக்கு கின்றன (9). மலைவாழ் குறவர்கள் தமக்கு அன்பர் களான குறப்பெண்டிர் கொல்லையில் பரந்திருக்கக் கண்டு அவர்களின் பார்வையினால் அவற்றைத் தம் கொல் லையை மேய்ந்து அழிக்க வந்த மான்கள் எனக் கருதி அவற்றின்மீது அம்பெய்தி விரட்ட எண்ணித் தம் விற்களை வளைக்கின்றனர் (3). சில குறப்பெண்டிர் மடமான் கன்றுகளை வலையில் அகப்படுத்திப் பின்பு அவற்றைத் தம்முடையவனவாகக் கொண்டு பஞ்சுச் சுருளின் நுனியினால் பாலை எடுத்து ஊட்டி வளர்க் கின்றனர் (1). மேகங்கள் மழை பொழிவது கடல் நீரினைக் குடங்களினின்றும் நீரைச் சொரிவதுபோல் காட்சியளிக்