பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 வடநாட்டுத் திருப்பதிகள்

கின்றது (4). எல்லாப் பக்கங்களிலும் பரவிப் பெருகும் தெளிந்த சுனைநீர் அருவிகள் கண்ணன் அணிந்த முத்துச் சட்டைபோல் காட்சி அளிக்கின்றது (6). அம்மலை முகடுகளில் வெண் மேகங்கள் தங்கியிருக்கும் நிலையினை நோக்கினால் அம்மலையின் முன் நெற்றி நரைவிட்டது போல் தோன்றுகின்றது (10).

இந்த மலையைக் கண்ணன் தூக்கின நிலையை ஆழ்வார் வருணிக்கும் நேர்த்தி தம் உள்ளத்தைச் கொள்ளை கொள்ளுகின்றது. ஏழுநாள் பொழிந்த கல்மாரியைத் தாங்காமல் ‘அம் மைத்தடங்கண் மடவாய்க் சியரும் ஆனாயரும் ஆநிரையும் அலரி'க் கண்ணனிடம் (3, சரண் புக, அவன் யானைக்குக் சோற்றுத் கவளத்தைத் திரட்டியெடுத்துக் கொடுக்கும் யானைப் பாகனைப்போல், ஒரு கையினை மலையின் வேர்ப்பற்றிலே செலுத்தி மற்றொரு கையினால் மலையின் மேலே பிடித்துத் தூக்கி னான் (4). கண்ணன் தன் திருத்தோள்களைக் குடையீன் காம்பாகவும் தன்னுடைய செந்தாமரை மலர் போன்ற திருக்கையிலுள்ள ஐந்து விரல்களைக் குடைக்காம்படியி ஆண்டாகின்ற கிளைக்கொம்புகளாகவும் கொண்டு மலையைக் குடையாகக் கவித்தான் (6). கண்ணன் ஏழு நாட்களிலும் தனியாக மலையைத் தாங்கியிருந்தும் அவனுடைய இயற்கையழகும் மாறவில்லை; அவன் வாட்டமும் அடையவில்லை; திருநகங்களும் நோவு எடுக்கவில்லை. இந் நிகழ்ச்சி ஓர் இந்திர சாலம்போல் நடைபெற்றது (10). இந்த ஆழ்வாரே “குன்று எடுத்து ஆநிரை காத்த ஆயா என்னை நமன் - தமர்கள் வந்து பற்றும்போது நீ வந்து காக்க வேண்டும்” என்று வேண்டுகின்றார். காதல் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாத நிலையிலிருக்கும் ஆண்டாள்,

ASAMSMMSMMSMSMS 20. பெரியாழ். திரு. 4. 19 : 9