பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடமதுரைப் பிறந்த மாயன் 109

ஊர் கோவர்த்தனத்திலிருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் உள்ளது; ஒரு சிறு குன்றின்மீது அமைந்துள்ளது இந்த ஊர். இங்குப் பாலகிருஷ்ணனுக்கு ஒரு திருக்கோயில் உள்ளது.

பர்சானா: நந்த கிராமத்திலிருந்து சுமார் 6 கி. மீ. தொலைவிலுள்ளது இச் சிற்றுார்; இங்குள்ள ஒரு சிறு குன்றின்மீது இராதைக்கு ஒரு திருக்கோயில் உள்ளது. இஃது இராதை கோயில் என்றே இராதையின் பெயரில் வழங்கி வருகின்றது; தமிழர்களின் கண்ணன் நப்பின்னைப் பிராட்டியை விரும்பியது போலவே வடநாட்டுக் .கிருஷ்ணன் இராதையை விரும்பினான் என்பதை நாம் அறிவோம்.

இதைத் தவிர இவ்வூரின் அருகில் ‘சங்கேத பீகாரி’ என்ற ஒரு திருக்கோயில் உள்ளது. இரண்டு சிற்றுார்கட்கு இடையில் கிருட்டிணனும் இராதையும் சந்தித்தனர் என்றும், இந்தக் குறியிடத்தின்’ நினைவாகவே இக் கோயில் எழுப்பப் பெற்றது என்றும் அப்பகுதி மக்களின் செவிவழிச் செய்தியாகும். சங்கேதம்’ என்றால் குறிப்பு என்பது பொருள். பீகாரி என்பது கண்ணனைக் குறிக்கும் குறியிடத்தின் நினைவாக எழுப்பப் பெற்றதால் ‘சங்கேத பீகாரி என்று இத்திருக்கோயில் பெயர் பெற்றது.

இங்ஙனம் பல்வேறு வகைகளில் பக்தி அநுபவம் எய்தப் பெற்ற நாம் கண்ணன் அவதார காலத்தில் இருப்பது போன்ற நினைவு ஏற்படுகின்றது. மன நிறை வுடன் நம் இருப்பிடத்திற்குத் திரும்புகின்றோம்.