பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ix

சீர்மை, பிரணவத்தின் அருமை, திருமந்திரத்தின் சிறப்பு இத்தத்துவங்களில் ஈடுபடுகின்றோம். இத்திருத்தலப் பயணத்தில் எம்பெருமான்களைப் பற்றிக் காட்டப் பெறும் ஆழ்வார் பாசுரங்கள் ஆராவமுதமாய் இனிப்ப தையும் உணர்கின்றோம்.

பேராசிரியர் டாக்டர் ரெட்டியார் பலதுறை அறிவை முறையாகப் பயன்று பெற்றவர்; அரும்பாடுபட்டு அத்துறைகளிலெல்லாம் பல நூல்களை எழுதிப் புகழ் அடைந்தவர். பதினேழு ஆண்டுகள் திருப்பதிப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றியவர். அங்கு அரும்பாடுபட்டுத் தமிழ்த் துறையை உருவாக்கியிருக்கும் அவரது உரன், திறன் வியந்து மகிழ்ந்து போற்றுதற்குரியவை. இதனைத் தவிர உழைப்பின் உருவமாய்த் திகழும் பேராசிரியர் ரெட்டியார் பல உயர்நிலைப் பள்ளிகளை உருவாக்கிய வர். ஒரு பல்கலைக் கழகத்தை உருவாக்கும் தகுதியும், திறமையும் உடையவர். என்ன செய்தாலும் இவர் அதனைத் தாம் செய்ததாக ஒப்புக்கொள்வதில்லை. இறைவன் திருவுள்ளக் குறிப்பினால் நடைபெற்றதாகக் கொண்டு மகிழ்வர். சுமார் இருபதாண்டுகள் திருப்பதி யில் பணியாற்றும் பேறு பெற்றமையால் ஏழுமலையா னின் திருவருள் இவர்மீது பாய்கின்றதாகக் கொள்வதே சரியாகும். ஒய்வுக் காலத்தில் சமய, தத்துவ நூல்களை எழுதிக் கண் போன்ற காலத்தைப் பொன் போன்று போற்றுவர். இவர்தம் முயற்சி வெல்க! வாழ்க!

-எஸ். சூரியமூர்த்தி