பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II6 வடநாட்டுத் திருப்பதிகள்

திஷ்டை, விழாக்கள் திருக்கோயில் ஆட்சி முறை, காலட் சேபம், மொழிபெயர்ப்பு போன்ற அற்புதப் பணிகளைத் தமிழ்மொழி நடையாடாத நாட்டில் குறைவறச் செய்த இப்பெருமகனாரின் அற்புதப் பணியினைத் தமிழகம் என்றும் போற்றும்.

இவர்தம் செயற்கரிய செயல்களைக் கண்டு சமயப் பேரறிஞர்களும், செல்வர்களும், வணிக மன்னர்களும் இவரடி பணிந்து சீடராயினர். இக்காலத்தில் இவர் வதரி திருத்தலப் பயணத்தை முடித்துத் திரும்புங்கால் சதபதம்’ என்னுமிடத்தில் சில திங்கள் தங்கித் தவமியற்றிச் சித்தி பெற்றுக் கோவர்த்தனம் மீண்டார். அங்கிருந்த அடியார் கட்குச் சம்பிரதாய கிரந்தங்களைப் புகட்டிக் கொண்டிருந் தார். அவர்களுள் இவருக்கு வலக்கைபோல் அந்தரங்கரா யிருந்தவர் சடகோபாச்சாரியார் என்பவர். இவருடைய தூண்டுதலால் வடமதுரையிலிருந்த இலட்சாதிபதிகளான சேட்ஜி இராதாகிருஷ்ணன், கோவிந்ததாஸ் என்போர் அரங்காச்சாரியாரின் சீடர்களாயினர். சேட்ஜியின் தமை யனாரான கோவிந்ததாஸ் சமணர். இவரும் சமண் சம யத்தைத் துறந்து வைணவரானார். இம் முப்பெரும் புள்ளிகளின் பெருங்கொடையே அரங்கமந்திர் தோன்று வதற்குப் பெரிதும் உதவியது.

ஆண்டாள் கண்ணனை மானசீகமாகக் கண்டு களித்துக் காதல் கொண்ட இடமாகிய பிருந்தாவனத்தில் ஆண்டாள்-அரங்கமன்னார் கோயில் அமைக்கத் திருவுள் ளம் பற்றினார் அரங்காச்சாரிய சுவாமிகள். இவருடைய விரும்பத்தை நிறைவேற்றி வைத்தவர் வைணவ சமயத்தில் ஊற்றம் பெற்ற சேட்ஜி இராதாகிருஷ்ணன் என்ற புனிதர், ஆண்டாள் திருவுளத்தில் கண்டதை அர்ச்சாவதாரத்தில் நிலைவேற்றிவைத்த அரங்காச்சாரியாரை இராமாநுசர் அம்சமாகவே போற்றுகின்றனர். திருமாலிருஞ்சோலை அழகருக்கு நூறுதடா அக்கார அடிசில் செய்து வைத்து