பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ΙΕ8 வடநாட்டுத் திருப்பதிகள்

வது கோவர்த்தன அரங்காச்சாரிய சுவாமி பீடத்தே யமர்ந்து இப்போது திருக்கோயில் ஆட்சி முறையையும் சீடர் பரிபாலனத்தையும் சீரும் சிறப்புமாக நடத்தி வரு கின்றார் (இவர் 1960-64-ல் திருப்பதி தேவஸ்தானம் கீழ்த்திசைக் கல்லூரியில் சிரோமணி பயின்றவர்). இவர்தம் ஆட்சித் திறமை, பன்மொழிப் புலமை, பக்தர்களுடன் பழகும் பாங்கு யாவரும் போற்றும் வண்ணம் அமைந் துள்ளன. இவர்தம் அரிய முயற்சியால் யாவரும் கண்டு மருளும் கண்ணாடி அறை அமைக்கப்பெற்றுள்ளது. முதல் கோவர்த்தனம் அரங்காச்சாரிய சுவாமிகள் தாம் திருநாடு அலங்கரிப்பதற்கு முன்பே ஆட்சிக் குழு (Trust Board) ஏற் படுத்தி அதற்குப் பீடாதிபதியே எல்லா உரிமைகளோடும் தலைவராக இருக்க வேண்டும் என்று நியமித்துள்ளபடியே இன்றும் திருக்கோயில் ஆட்சிமுறை நடைபெற்று வருகின் றது. திருக்கோயிலின் ஆதரவில் ஒரு வடமொழிப் பாட சாலையும், ஆயுர்வேத மருத்துவமனையும், ஒரு பெரிய நூலகமும் இயங்கி வருகின்றன.

பழமையான கோயில்கள் : கோவிந்த தேவருக்குரிய கோயில் சிவப்புநிறக் கற்களால் அமைந்தது. வங்காளி களால் கட்டப்பெற்றது. மதன் மோகருக்குள்ள கோயில் அக்பரின் தளபதியாகிய மான்சிங் என்பவரால் கட்டப் பெற்றதாகச் சொல்லப்பெறுகின்றது. இரண்டிலும் கண்ணன் எழுந்தருளியுள்ளான்.

புதிய கோயில் : இது ஷாஜி கோயில் என்று வழங்கப் பெறுகின்றது. மிக அண்மைக் காலத்தில் கட்டப் பெற்றது. இது கண் கவர் எழிலுடன் திகழும் திருக் கோயிலாகும்; கண்ணனுக்கு உரியதான பழைய கோயில் களிலும் இந்தப் புதிய கோயிலிலும் சைதன்ய மார்க்க சம்பிரதாயம் அனுட்டிக்கப் பெறுகின்றது. வங்காளத்தில் தோன்றிய சைதன்ய இயக்கம் இங்கெல்லாம் வந்து பரவி யுள்ளது.