பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I32 வடநாட்டுத் திருப்பதிகள

பிரலம்பன் வரலாறு: பிரலம்பன் ஒர் அசுரன். ஓர் ஆயர் சிறுவன் வடிவங்கொண்டு கிருஷ்ணன், பலராமன், ஏனைய ஆயச் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந் தான். ஒருவிதப் பந்தாட்டத்தில் தோற்றவர்கள் வெற்றி யடைந்தவர்களைச் சுமந்து கொண்டு ஆநிரைகள் பிரிந்து சிதறிப் போகாமல் அவற்றை வலப்புறமாகச் சென்று மடக்க வேண்டும் என்பதும், அங்ஙனம் செல்லுங்கால் தாம் அமைத்துள்ள குறிகளைத் தொட்டுத் தாம் இருந்த இடத்திற்கே வத்து சேரவேண்டியது என்பதும் நிபந்தனை. இதில் பலராமனைப் பிரலம்பன் சுமந்து செல்லும் வாய்ப்பு வந்தது. அங்ஙனம் சுமந்து செல்லுங்கால் பிர லம்பன் தீய எண்ணத்தனாய்க் குறிகளைத் தாண்டிப் போனான். பலராமன் தன் ஆற்றல் சிறப்பினால் அவ னுக்கு அதிகப் பாரமானான். உடனே பிரலம்பன் தன் உண்மையான அரக்க உருவத்துடன் வான்வழிச் செல்லத் தொடங்கினான். பலராமன் மடக்கிய தன் கையினால் அசுரன் தலையில் ஓங்கிக் குத்த, அசுரன் தலை பிளந்து உடலெங்கும் செந்நீர் பெருகக் கதறிக்கொண்டு பூமியில் விழுந்து உயிரொழிந்தனன். இந் நிகழ்ச்சியினையும் மேற் குறிப்பிட்ட தேனுகன் காளியன் நிகழ்ச்சிகளையும் ஒரு சேரத் தொகுத்து,

‘'தேனுகன் பிலம்பன் காளியன் என்னும்

தீப்பப் பூடுகள் அடங்க உழக்கிக்

கானகம்படி உலாவி உலாவிக்

கருஞ்சிறுக் கன்குழல் ஊதின போது.’

(பிலம்பன்-பிரலம்பன்; தீப்பப் பூடுகள்-கொடிய பூண்டுகள், உழக்கி-அழித்து; கானகம்படி-காட்டுக் குள்ளே; கரு சிறுக்கன்-க்ரிய திருமேனியையுடைய சிறுபிள்ளையான கண்ணன்)

8. பெரியாழ். திரு. 3 . 6 :4