பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிருந்தாவனத்தில் கண்ணன் 129

கின்றது. கண்களினின்றும் ஆனந்தக் கண்ணிர் துளிர்க் கின்றது. கூந்தல் அவிழ்கின்றது; நெற்றி வியர்க்கின்றது (3), தும்புருவும், நாரதரும் கூட குழலோசையில் ஈடு பட்டுத் தமது வீணைகளை மறக்கின்றனர். கின்னர மிதுனம் என்று பேர் பெற்றவர்களும் தத்தம் கின்னர இசைக் கருவிகளை விட்டொழிக்கின்றனர் (5). வானத்தில் திரியும் கந்தர்வர் அனைவரும் அமுதம் போன்ற குழலோசையாகின்ற வலையில் சிக்கி வெட்கி அறிவிழந்து பாடுகையாகிய தொழிலையே கைவிடு கின்றனர் (6). வானுலக மாந்தர் யாவரும் தமது அவி சையும் மறந்து இடைச்சேரி வந்து திரண்டு கண்ணன் செல்லுமிடங்களுக்கெல்லாம் தாங்களும் பின்தொடரத் தொடங்குகின்றனர் (7).

கானிலுள்ள நிலைத்திணைகளும், இயங்கு திணை களும் பெருமாற்றங்களை அடைகின்றன. கோவிந்தன் குழலோசையைக் கேட்டவுடனே தாவர இனங்களின் செயல்கள் இவை:

மரங்கள் நின்று மதுதாரைகள் பாயும்;

மலர்கள் வீழும்; வளர்கொம்புகள் தாழும் இரங்கும், கூம்பும்; திருமால் நிற்கின்ற

பக்கம் நோக்கி அவைசெய்யும் குணமே” |மது - தேன்; கூம்பும் - குவிக்கும்) பறவை, கறவைகளின் செயல்கள் இவை:

“பறவையின் கணங்கள் கூடு துறந்து

வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக் கறவையின் கணங்கள் கால்பரப் பிட்டுக்

கவிழ்ந்து இறங்கிச் செவி ஆட்ட கில்லாவே.”

22. பெரியாழ்.திரு. 3. 6 : 1.0 23. . 8, 6 : 8

38-9