பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிருந்தாவனத்தில் கண்ணன் 131.

கொடுக்கின்றனர். ஒருத்தி உங்கள் வளையல்களின்மீது கவனமாக இருங்கள்’ என்கின்றாள் (2. ஒருத்தி கண்ணனை எல்லோரும் பார்ப்பதுபோல் பாத்து, பிறகு சிறிது குறிப்பாக நோக்க, அவளைப்பற்றி அலர் தொடுக்கின்றனர் (3). ஒருத்தியின் துகில் அரையில் தங்க வில்லை; கையில் வளை நிற்கவில்லை; கொங்கை கிளர்ந்து குமைத்து குதுகலித்து அவள் கட்டுக்குள் அடங்கவில்லை (4). ஒருத்தி மற்றொருவர்க்கென்னைப் பேசலொட் டேன்’ என்கின்றாள் (5). இன்னொருத்தி ‘பந்து கொண்டானென்று வளைத்து வைத்துப் பவளமாய் முறுவலும் காண்போம் தோழி!’ என்கின்றாள் (6). மற்றொருத்தி அவன் திருக்கோலத்தில் மெய்மறந்து நிற்கின்றாள் (7). -

குலசேகரப் பெருமாள் ஊடல் கோபம் கொண்ட ஆயமகளிர்கள் கண்ணனை வெறுத்துரைக்கும் காட்சி களைப் பேசி இனியராகின்றார். கண்ணபிரான் அவர்களுள் யொருத்திக்கு யமுனையாற்றின் மணலில் ‘குறியிடம் அமைத்தான்; ஆனால் அங்கு அவன். போகத் தவறினான். அவள் மட்டிலும் மணலில் விடி: மளவும் காத்திருந்து ஏமாந்து வருத்தத்துடன் வீடு திரும்பி னாள். மற்றொருநாள் கண்ணனைக் கண்டபோது அவள், “உன்னுடைய பொய்யான வார்த்தைகளைக் கேட்டு “சு மழைபோல் பனிக்கு ஊதல் எய்தி நான் நடுங்கி மணலில் காத்திருந்தேன். கனவிலும் பொய் சொல்லி அறியாத வாசுதேவர் வயிற்றில் பிறந்த நீயும் தந்தைன் ஒத்திருப்பாய் என்று நம்பிக் கெட்டேன் கால என்கின்றாள் (1). வேறோர் இட்ைப்பெண், ‘Tir வீட்டுப் பெண் தனியேயிருந்து தயிர் கடையா நிற் அவளுக்கு உதவும் பாங்கில் அவள் வீடு புக்கு தலையிலிருந்த பூக்கள் அவிழ்ந்து அசையவும், முகம்

27. பெரு. திரு. 8