பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிருந்தாவனத்தில் கண்ணன் } 35

அதற்குப் பராங்குச நாயகி (நம்மாழ்வார்) “ஆமாம், என்மீது உனக்கு அளவு கடந்த அன்புதான். உன் அன்பை நீயே மெச்சிக்கொள்ள வேண்டும்’ என்கின்றாள்.

‘அம்மணி, இப்படியும் சொல்லலாகுமா? உன்னிடத் தில் எனக்கு அன்பு மிக உள்ளதென்பதில் இவ்வளவு ஐயமோ? எனது கண்ணிணையில் என் அன்பு முழுதும் உனக்குத் தெளிவாக வில்லையா?” என்று சொல்லிக் கொண்டே புன்முறுவல் கொண்ட திருப்பவளத்துடன் நெருங்கி வருகின்றான்.

அப்போது நாயகி, உன் தாமரை புரை கண்ணினை யும் செவ்வாய் முறுவலும் ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோம் யாம்’ என்கின்றாள்.

கண்ணன் வேறு சில சிறு குறும்புகள் செய்யப்புக, ஆயர் நங்கை முகத்தை மாற வைக்கின்றாள். கண்ணனோ அவளை விட்டான் இலன். பின்புறத்து அவளுடைய அளகபாரத்தைக் கண்டு மயில்தோகை போன்ற நின் கூந்தற் கற்றையின் அழகுதான் என்னே!” என்கின்றான்.

இங்ஙனம் சில வருணனைகளைப் பேசிக்கொண்டு புல்லாங்குழல் ஒசையால் இவளை வசப்படுத்தலாம் என்று திருவுள்ளம் கொண்டு குழலுதுகின்றான்.

ஆயமங்கை அதற்கு மசிவாளா? அப்பா, நான் அல்ல கூந்தலழகி. உன் திருவருளுக்குப் பாத்திரர்களான கூந்தலழகியர் திருவாய்ப்பாடியில் பலருள்ளனர். அங்குச் சென்று பசுக்களை மேயவிட்டுக்கொண்டு, இக்குழி லோசையை ஆங்கு எழுப்புக. அவர்கள். திருவுள்ளம் உகப்பர்,” என்று திசை திருப்புகின்றாள்.

30. திருவாய்-6.2:2. தாமரைபுரை - தாமரை போன்ற இணைஇரண்டு; முறுவல் - புன்சிரிப்பு: ஆகுலங்கள் - துன்பங்கள்.