பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xii

‘பாண்டிகாட்டுத் திருப்பதிகள் (1977) என்ற மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நூலிலுள்ள 14 கட்டுரைகளிலும் ஆழ்வார் பெருமக்களின் பக்தியுணர்ச்சியின் கொடுமுடிகளைக் காணலாம். பாசுரங்களின் சொல்வளம், உரையாசிரியர் கள் பாசுரங்களை அநுபவித்த பாங்கு, என் சிறிய உள்ளம் ஆழ்வார் பாசுரங்களில் ஆழங்கால்பட்ட முறை முதலிய வற்றைக் கண்டு மகிழலாம். இந்நூலைப் படிப்போரின் உள்ளங்களையும் இக்கட்டுரைகள் ஆழ்வாரின் திருப் பாசுரங்களைச் சேவித்து அநுபவிக்கத் துண்டும் கருவி களாக அமையின் அதனை யான் பெற்ற பெரும் பேறாகச் கருதுவேன்.

இத்தகைய பக்தி நூல்களை வெளியிடும் நிறுவனம் தமிழகத்தில் அரியனவாகவே உள்ளன. காரணம், நூல் களை வாங்கிப் படித்து அநுபவிப்பார் சிலரே. இந்நிலை யில் ஏழுமலையான் திருவருள் பாலித்தான். திருமலை திருப்பதி தேவஸ்தானம் சமய நூல்களை வெளியிடும் திட்டத்தின்கீழ் நிதி உதவியது. ஆகவே, இந்நூல் தமிழ் கூறு நல்லுலகில் நடையாட வாய்ப்புக் கிட்டியது. இங் கனமே ‘பைந்தமிழ்ப் பின்சென்ற பச்சைப் பசுங் கொண் டலின்’ திருவருளால் சோழ காட்டுத் திருப்பதிகள்” (2 தொகுதிகள்), “முத்தி நெறி’ என்ற மூன்று நூல்களும் வெளிவரும் என்ற நம்பிக்கை என்றும் என்பால் உண்டு. நிதி உதவிய தேவஸ்தானத்தாருக்கு என் அன்பு கலந்த நன்றிய தலைப் புலப்படுத்திக் கொள்ளுகின்றேன்.

சென்னை உயர்நீதி மன்றத்து மாண்புமிகு நீதிபதி திரு எஸ். சூரியமூர்த்தி என் ஒருசாலை மாணாக்கர் (College mate); என் இனிய நண்பர். நாங்களிருவரும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். கல்லூரி வாழ்வில் முதலாண்டிலேயே பல்கலைக்கழக ஆங்கிலப் பேச்சுப்