பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#40 வடநாட்டுத் திருப்பதிகள்

விரும்பப் புக்கான்; இவர்க்கு அவனோட்டை சகவாசம் ஸ்வரூப ஞானத்துக்கு உடலாய்த்து; அவனுக்கு இவரோட்டை சகவாசம் தேகாத்மாபிமாநத்துக்கு உடலாய்த்து’ என்பது. ஆருயிரும் உடனே உண்டான் என்கையாலே தேகமென்று ஹேயதா புத்தியும் (விடத்தக்கது என்ற அறிவும்) ஆன்மா என்று உபாதேயதாபுத்தியும் (எடுத்துக்கொள்ளத் தக்கது என்ற அறிவும்) இல்லாமல் இரண்டிலும் துல்யமான பிரதி பத்தியையே (நம்பிக்கை; ஈடுபாடு) கொண்டான் என்பது தெளிவாகும்.

இவ்விடத்தில் ஒரு குறிப்பு: ‘ஓம்’ என்ற பிரணவத் தினால் ஆன்மா பரமான்வாவிற்கே அடிமை என்பது தெரிகின்றது. இந்தச் சீவன் அசித்தைப் போன்று ஈசுவர னுக்கே பயன்படுவதாக உள்ளான். தான் பிறர் பொருட்டே பயன்படுதலையே இயல்பாகக் கொண்டுள்ள அசித்தைப் போன்று உனக்கே நாம் ஆட்செய்வோம்.’ என்று ஆண்டாள் கூறியவாறு தன்னை எம்பெருமானுக்கே இன்ப மூட்டுமாறு (பயன்படுமாறு) விநியோகித்துக் கொள்ளவேண்டும் என்று பிரார்த்திக்கவும் செய்கின்றான். அஃதாவது, சீவான்மா ஈசுவரன் விருப்பத்தின்படியே செயலாற்றும் பரதந்திரன் என்பது குறிப்பு. இதனையே,

“போகதசையில் ஈசுவரன் அழிக்கும்போது நோக்க

வேனும் என்று அறியாதொழிகை’’’ என்ற முமுட்சுப்படி குறிப்பிடுகின்றது. ஈசுவரன் சீவனா கிய தன்னுடன் கலந்து பரிமாறுங்கால் அவன் தன்மாட்டுக் கொண்டுள்ள பிரேமப் பித்தினால் தாழ நின்று பரிமாறித் தன்னுடைய சேஷத்துவத்தை (அடிமை நிலையை) அழிக் குங்கால், ‘நம் சேஷத்துவத்தை நோக்கிக் கொள்ள

6. திருப்-29 7. முமுட்சு-92