பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண் துவராபதி மன்னன்

f

3.

வேண்டும்’ என நினைத்து சீவனாகிய தான் பின்வாங்கி அவன் போகத்தைக் கெடுக்காமலிருக்க வேண்டும் என்பது மேற்கண்ட முமுட்சுப்படியின் பொருளாகும். இதுவே பகவானுக்கே ஆனந்தம் ஏற்படுமாறு விநியோகிக்கப் படுகை எனச் சொல்லப்படுவதாகும்.

இதனை மேலும் விளக்குவோம். ஈசுவரன் சேதனகை; வினியோகம் கொள்ளல் இரண்டு வகைப்படும். இவற்றுள் அவன் தலைவனாகவே இருந்து இவனை அடிமையாக வைத்துப் பரிமாறுதல் ஒருவகை. சில சமயம் அவன் இவனோடு கலந்து போகம் துய்க்கக் கருதுவான். அவ்வ மயம்,ஈசுவரன் சேதநனை அடிமை கொள்பவன்போன்று, இவனிடம் நெருங்கி, இவன் மாட்டுத் தனக்குள்ள வேட்கை மிகுதியால், இந்தச் சீவான்மாவைத் தலைவனாக வைத்து தான் அடிமையாக இருந்து இழிதொழில் செய்து அவ் விதத்தில் சேதநனை வினியோகம் கொள்ளுதல் மற்றொரு வகை. குசேலருக்குக் கண்ணன் செய்த உபகாரங்கள் இந்த இரண்டாவது வகையில் அடங்கும்.

இந்த எண்ணங்கள் நம்மனத்தில் குமிழியிட்டவண்ணம் முத்திதரும் நகரங்கள் ஏழனுள் ஒன்றாகிய துவாரகைத் திருத்தலத் பயணத்தைத் தொடங்குகின்றோம். துவாரகை மேற்கிந்திய இருப்பூர்திப் பாதையில் ஜாம் நகருக்கும் ஒக் காவிற்கும் இடையிலுள்ள ஒர் இருப்பூர்தி நிலையம் ஒக்கா விலிருந்து 18 மைல் தொலைவிலுள்ளது. எல்லா வசதி களும் கொண்ட ஒரு சிறிய நகரம் இது. இருப்பூர்தி நிலை யத்திலிருந்து ஒன்றரை கி.மீ. தொலைவிலுள்ளது. நிலை யத்திலிருந்து தோங்கா என்ற குதிரை வண்டி கிடக்கும். அதன்மூலம் நகருக்குச் செல்லுகின்றோம். வழியிலுள்ன இராமநுச கூடத்தில் தங்குகின்றோம். சாமான்களைப் பாதுகாப்பில் வைத்து விட்டுத் திருக்கோயிலை நோக்கிப் புறப்படுகின்றோம். கிருட்டிணன் திருக்கோயில் கடலுக்கு அருகில் கோமுகி நதி கடலுடன் கலக்குமிடத்தில் உள்ளது.