பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 வடநாட்டுத் திருப்பதிகள்

இந்த இடத்தில் நீராடுவதற்கு ஒரு சிறிய கடடணம் செலுத்துதல் வேண்டும். நீராடி ஈர ஆடையுடன் கண்ண னைச் சேவிக்கின்றோம்; கண்ணனை மிக அருகில் நின்று சேவிப்பதற்கும் ஒரு சிறிய கட்டணம் உண்டு. இந்த மூர்த்தி நின்ற திருக்கோலத்தில் உள்ளது. இத்த மூர்த்தி யைத் தான் திருமழிசையார் துவரைக் கோனாய் நின்ற மாயன்’ என்று குறிப்பிடுவர். முழுப் பாசுரத்தையும் சிந்திக்கின்றோம்.

‘சேயன் அணியன்

சிறியன் மிகப்பெரியன் ஆயன் துவரைக்கோனாய்

கின்ற-மாயன் அன்(று) ஒதிய வர்க்கதனைக்

கல்லார் உலகத்தில் ஏதிலரணம் மெய்ஞ்ஞானம்

இல்’ (அன்று-பாரதப் போர் நடந்த காலத்தில், ஒதிய வாக்கு சரம சுலேரகம்; ஏதிலர்-பகவத் விரோதிகள்) பார்த்தசாரதி பாரதப்போர் நடந்த காலத்தில் பார்த் தனுக்கு உபதேசித்த சரம சுலோகத்தை-அந்தத் திருவாக் கைக்-கற்று உணர்ந்தவர்களே எம்பெருமானுக்கு அன்பர் களாவர்; கல்லாதவர்கள் பகைவர்களாவர்.

துவரை நாதனைத் திருமழிசையார், நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார் ஆகிய ஐந்து ஆழ்வார் பெருமக்கள் மங்களாசாசனம் செய்துள் ளனர். கண்ணனை வணங்கிய பின்னர் எதிர்ப்புறத் திலுள்ள கல்யாண நாராயணின் திருக்கோயிலுக்கு வரு இன்றோம். ஒரு காலத்தில இருந்த திருக்கோலத்தில் சேவை சாதித்த இந்த எம்பெருமான் இப்பொழுது நின்ற

8. நான் திருவந். 11