பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 வடநாட்டுத் திருப்பதிகள்

இடமாகும். இத் திருத்தலம் யமுனையின் வடகரையி அலுள்ளது. சுமார் இரண்டு கிலோ மீட்டர் அகலமுள்ள ஆற்றைக் கடந்துதான் செல்ல வேண்டும். இவ்வாறு சென்றால் 6 கி.மீ. தொலைவு. பாலத்தின் வழியாகச் செல்ல வேண்டுமாயின் சுமார் 9 கி.மீ. தொலைவு செல்ல வேண்டும். இங்ஙனம் செல்லுவதற்குப் பேருந்து வசதிகள் உண்டு; தோங்காவிலும் போகலாம். ஆயர் பாடி (கோகுலம்) ஒரு சிறிய ஊர்; வடமதுரையின் தென் கிழக்கில் உள்ளது. கிருஷ்ணன் தன் பிள்ளைப் பிராயத் தைக் கழித்த இடம்தான் இது என்பதற்கு யாதொரு வித மான அறிகுறியும் தென்படவில்லை. பண்டாக்கள் பழங் காலம் தொட்டே உள்ள இடங்கள் என்று காட்டுபவை நம்பத் தக்கவை அல்ல. இங்கனம் அடையாளங்களே இன்றிப் போனமைக்கு இஸ்லாமியர் படையெடுப்பால் பல இடங்கள் பாழானமையே காரணம் என்று கொள்ள லாம். மேலும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற திருக்கோயில்களும் இன்று இங்கு இருப்பனவாகத் தெரியவில்லை.

இங்குள்ள திருக்கோயில்கள் யாவும் வைணவத்தில் வல்லபர்கள் என்ற பிரிவைச் சார்ந்தவர்களால் கட்டப் பெற்றவை. திருக்கோயில்கள் யாவும் பாலகிருஷ்ணனுக் காகவே எழுந்தவை. இந்திக் கவிஞர் துளசிதாசரைப் போலவே, பிறவிக் குருடரான சூர்தாஸ் என்ற கவிஞரும் வல்லபாச்சாரியாரின் சீடர். இவரை இங்குள்ள நவநீத கிருட்டிணரின் திருக்கோயிலுக்கு இட்டுச் சென்றபோது, இவர் சந்நிதியில்தான் முதல் பாடலைப் பாடியதாகச் சொல்லப்பெறுகின்றது. இவரும் துளசிதாசரைப் போலவே புகழ்பெற்ற பெருங் கவிஞராவார். ஆயர் பாடியை நினைக்கும் போதே கண்ணன் விளைத்த சிறு குறும்புகளும் அதிமானுட சேஷ்டிதங்களும். அவனுக்குக் கம்சனால் விளைவிக்கப் பெற்ற பேரிடர்களும், அவற்றை வியத்தகு முறையில் அவன் சமாளித்த முறைகளும், இவை