பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j 5: வடநாட்டுத் திருப்பதிகள்

செள சீல்யம், ஆச்ரித பாரதந்திரியம் முதலான இலங்களை வெளியிடுவதற்கென்றே மானுடனாக அவதரித்திருக்கின்ற மையினால், உடலோடு கட்டுண்டிருக்கை முதலான இவ்: வகைகளால்தான் அத்திருக்குணங்களை விளங்கச் செய்து கொள்ள வேண்டுமென்று. ஒரு சுற்றுக்குப் போதாத தாம்பு இரண்டு மூன்று சுற்றுகளுக்கும் போதுமாறு உடலைச் சுருக்கிக்கொண்ட அற்புதம் கட்டுண்ணப் பண்ணிய என்ற சொற்றொடர் நயத்தால் போதரும். ‘கட்டுண்ட என்னாது கட்டுண்ணப் பண்ணிய’ என்றத னால் தன்னைக் கட்டுவதற்குத் தானே இசைந்து போந்த மையை நன்கு விளங்கச் செய்கின்றார். இதற்கு நஞ்சீயர் அருளிச் செயல்: ஆச்ரிதர் கையாலே கட்டுண்ணாவிடில் சீலத்துக்குப் போராது. அதாச்ரிதரைக் கட்டாவிடில் (சம்சாரத் தளையில் அழுந்தச் செய்யாவிடில்) பிரவாவத் திற்குப் (பெருமைக்குப்) போராது. ராஜாவானவன் எதிரிகளைக் கட்டிவைக்கையும் பும்ஸ்த்வம் (பெருமை); தன் மகிஷியின் (துணைவியின்) கையில் பூமாலையாலே கட்டுண்டு கிடக்கையும் பும்ஸ்த்வம்.” பரமபுருடன் கர்ம வசியர்ான நம்போலியரைப்போல் பிறந்தவாறும், பசி உண்டாகி நவநீதம் முதலியவற்றை விரும்பியவாறும், அவற்றை இடுவார் இல்லாமல் களவு வழியிலே பெறுகை யும், அவற்றைச் சடக்கென விழுங்கிவிட்டு மறைத்துக் கொள்ள மாட்டாமல் வாயது. கையதாக அகப்பட்டுக் கொள்கையும், சம்சார பந்தங்களையெல்லாம் தவிர்க்க வல்லவனான தான் இந்தப் பந்தத்தைத் தவிர்த்துக் கொள்ள மாட்டதவனாகி ஏங்கி ஏங்கி அழுகையுமாகிற் இவையெல்லாம் என்ன ஆச்சரியம் என்பார் பெரு மாயன்’ என்கின்றார். இவனுடைய மேன்மைக்கு

எல்லை காண முடியாது என்பது இவற்றால் போதரும்.

நம்மாழ்வார் ஏ ைன ய அவதாரங்களைவிட

கிருஷ்ணாவதாரத்திலே அதிகமாக ஈடுபட்டவர். அதுவும்