பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#56 வடநாட்டுத் திருப்பதிகள்

றனன். இடையன் தன்னிடம் காரியம் கொள்ளும் திறனுக்கு வியந்து “தாழிக்கும் வீடு தந்தேன்’ என்று அருளிச் செய்தனன். ததி.பாண்டனும் மூடிய அத் தாழியை நீக்கிக் கண்ணனை வெளியேறவிட்டு, தாழி யுடன் வீடுபேறடைந்தனன். இந் நிகழ்ச்சியைத் திரு. வுளங்கொண்டு திவ்வியகவி பிள்ளைப் பெருமாள் அய்யங்கார்,

“சிந்திக்க நெஞ்சில்லை; காவில்லை

காமங்கன் செப்ப; நின்னை வந்திக்க மெய்யில்லை; வந்திருபோது

மெய்ம்மா மலர்ப்பூம் பக்தித் தடம்பொழில் சூழ் அரங் கா! ததி பாண்டனுன்னைச் சந்தித்த காள்முத்தி பெற்றதென்

னோதயிர்த் தாழியு மே’ (சிந்திக்க-நினைக்க; செப்ப - உச்சரிக்க வந்திக்க

வணங்க, மெய்-உடம்பு; இருபோது-காலை. மாலை, தடம்-தடாகம்; சந்தித்த நாள்-சந்தித்த அன்று)

என்று பாசுரம் அருளிர் செய்தனர். பண்டங்களைக் கொள்ளுதற்கன்றி உன்னைச் சிந்தித்ததற்கு உதவாத நெஞ்சையும், உள்ளவற்றை வெளியில் விடுவதற்கன்றி திருநாமங்களைச் செப்புவதற்குதவாத வாயையும், நின்னைத் தாழ்ந்து வணங்கத்தகாத மேனியையும் உடையதாய் அசித்தாயிருந்ததொரு பாண்டமும் வீடு பெறச் செய்தது உன் பெருங்கருணை எனின், இவை எல்லாம் உடைய சித்தாய் இருக்கும் எம்போலியர்க்கு அது வாய்க்காதது என்னோ?” என்று அய்யங்கார் அங்கலாய்க்கின்றனர். திருக்கோளுர் பெண்பிள்ளை யொருத்தி இராமனுசரை நோக்கி, “இங்குண்டு.

  1. , 55r-5