பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 வடநாட்டுத் திருப்பதிகள்

திருவடிப்பேறு கிட்டும் என்பது வைணவர் களின் தம்பிக்கை.

திருப்பாற்கடல் என்ற திருத்தலம் வடதுருவத்திற்கும் அப்பால் உள்ளதாகச் சொல்லப் பெறுகின்றது. மனிதர் கட்கு எட்டாத இடம் இது, வட கடலைச் சேவித்தே மன நிறைவு பெற வேண்டியதுதான். சூக்கும உடலைக் கொண்டவர்கள்தாம் இந்த இடத்திற்குச் சென்று அடைதல் முடியும்; தேவர்கள், பண்டைய முனிவர்கள், யோகியர் இவர்களைப் போன்ற பிறர் இந்த இடத் திற்குச் செல்லுதல் கூடும். நான்முகன், தேவர்கள் இவர் களின் குறைகளைக் கேட்டு அவற்றைத் தீர்ப்பதற்காகவே பரமபதநாதன் வியூக நிலையில் இங்கு எழுந்தருளி யுள்ளான். அடியார்கள் பொருட்டு அவதாரங்கள் எடுக் கும் இடமும் இதுதான். இந்தப் பாற்கடலைக் கடைந்து தான் அமுதம் பெற்றுத் தேவர்கட்கு வழங்கினான் எம் பெருமான்; பெரிய பிராட்டியார் பிறந்த இடம் இது தான்; அவரை இறைவன் ஏற்றான்.

பாலோடை (Milky way) என வழங்கப்பெறும் விண்மீன்களின் கூட்டத்தைத்தான் பண்டையோர் பாற் கடல் என வழங்கியதாகவும் சொல்லப்பெறுகின்றது. இப் பாற்கடலின் தனிச் சிறப்பு இன்றும் அறிவியலறிஞர் களிடையே ஒரு புதிராகவே உள்ளது. பேரண்டத்தில் வேறெங்கும் நடைபெறாத ஒரு திருக்கூத்து இங்கு நடை பெற்று வருவதாகக் கருதுகின்றனர். அவர்கள். மற்ற இடங்களிலெல்லாம் ஒரு பொருள் உருமாறி வேறொரு பொருளாகுமேயொழிய சூனியத்திலிருந்து ஒரு பொருள் உண்டாவதில்லை. ஆனால், பாலோடை மாத்திரம் இதற்கு விதிவிலக்காகும் என்பதை அறிவியலறிஞர்களின் கருத்தாகும். வெறும் பாழிலிருந்து அதாவது இன்மை யினின்று நீரிய அணுக்கள் (Hydrogen atoms) பாலோ டையில் எப்படியோ படைக்கப் பெறுகின்றன.இது விளங்