பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. வைகுண்ட நாதன்

வைகுண்டத்தைத் திருநாடு என்றும், பரமபதம் என்றும், நலம் அந்தம் இல்லதோர் நாடு’ என்றும், நித்திய விபூதி என்றும் வழங்குவர் வைணவப் பெருமக்கள். ஆழ்வார்கள் பெருநிலம்’, ‘பெருவிசும்பு’ ‘உம்பர் உலகு’, ‘விண்ணகம் நாரணன் உலகு”, ‘இன்ப வீடு’, ‘அமரர் உலகம்’, வானோர் கடிநகர்’ என்றெல் லாம் பன்னி உரைப்பர். இந்த விளக்கம் வைணவ ஆகமங்களிலும் வேறு வைணவ நூல்களிலும் நுவலப் பெறும் நித்திய விபூதி பற்றிய விளக்கத்துடன் ஒத்துள்ளது”. இந்த உலகின் ஆநந்தம் அளவிறந்து ஒப்பற்றதாக இருக்கும் பான்மையது. இங்குத் திவ்விய கற்பகச் சோலைகள், தானாவித மலர்கள் நிறைந்த திவ்விய பூங்காக்கள், திவ்விய இள மரக்காக்கள், திவ்விய செய்குன்றங்கள், நீராடும் திவ்விய தடாகங்கள் முதலியவை நிறைந்து இருக்கும். இங்கு மிகவும் இடமகன்ற நிரதிசய ஆனந்தமயமான திருமாமணி மண்டபம் ஒன்றுண்டு. உபய விபூதியிலுள்ளவர்களும் ஒரு மூலையில் அடங்கும்படியான மிக விசாலமானது. இங்குள்ள பொருள்கள் யாவும் சுத்த சத்துவத்தா லானவை. இங்குக் காலம் நடையாடாது; காலை - மாலை, பகல்-இரவு, இன்று நேற்று என்ற நிலைகள்

1. திருவாய் 2, 8 : 4

2. Subbu Reddiar, N : Religion and Philosophy of Nalayiram—

, 585.