பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17.2 வடநாட்டுத் திருப்பதிகள்

இங்கு இல்லை; முன்-பின் என்ற நிலைதான் உண்டு. வீடுபேறு அடைவதற்கேற்ற உபாயங்களைக் கையாண்டு. அவன் திருவருளைப் பெற்ற முமுட்சுகள்தாம் இந்த நீள் விசும்பினை அடைதல் முடியும். இவர்கள் இப்பூவுல கிற்குத் திரும்பி வருதல் இல்லை. பிரளய காலத்தில் இவர்கட்கு அழிவு இல்லை. இறைவன் திருவுளப்படி எந்த உருவத்தையும் இவர்கள் மேற்கொள்வர்.

பரமபத நாதன் வீற்றிருக்கும் இடம் இந்த மண்டபத் தில்தான். இவன் வீற்றிருக்கும் சீரிய சிங்காசனம் அற்புதமான கோப்புடையது; பன்னிரண்டு இதழ்களை யுடைய நானா சக்திமயமான திவ்விய பொற்றாமரைப் பூவின்மீது விசித்திரமான கட்டிலைக் கொண்டது. இந்தக் கட்டிலின்மீது பல்லாயிரம் சந்திரர்களை உருக்கி வார்த்தாற்போல் குளிர்ந்த தன்மையையுடைத் தான திருமேனியையுடையனாய கல்யாண குணங்கட்கு அந்தமில்லாமையினால் அநந்தன் என்ற திருநாம் முடையவனாய், எ ல் லா வி த அடிமைத் தொழில் புரிபவர்கட்கெல்லாம் உபமான நிலமாயிருத்தலால் சேஷன் என்னும் திருநாமமுடையவனாகிய திரு அனந்: தாழ்வானாகிய படுக்கையில் வெள்ளிமலையின் உச்சியில் பல்லாயிரம் பகலவன் உதித்தாற்போல் இருக்கும் ஆயிரம் பணாமுடி மண்டலமாகிய சோதிமண்டலத்தின் நடுவில் வீற்றிருப்பன். அருள்தேவியான பெரிய பிராட்டியார் வலப் பக்கத்திலும், பொறைத் தேவியான பூமிப் பிராட்டியாரும் ஆநந்த தேவியான நீளாப் பிராட்டி யாரும் இடப்பக்கத்திலும் இருப்பர். இவனை அனந்தன், கருடன், விஷ்வக்சேனர் முதலான நித்திய சூரிகளும், இவ்வுலகத் தளைகளினன்றும் விடுபட்ட முக்தரும் அநுபவித்தற்கு உரியனாய் இருப்பன்.

இந்த எம்பெருமான் சத்தியம், ஞானம், ஆனந்தம், ஆனந்தம் இவற்றின் சொரூபமாக இருப்பவன். இடத்