பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 74 வடநாட்டுத் திருப்பதிகள்

என்ற பாசுரப் பகுதியில் இறைவனின் திருமேனி காட்டப் பெறுகின்றதை அறியலாம். வேதாந்த தேசிகரின் தயா சதகத்தில் இந்த எம்பெருமானின் திருக்கோலம் நன்கு காட்டப் பெறுகின்றது. இடக்கால் தொங்கிய நிலை யிலும், வலக்கால் மடிந்த நிலையிலும் இருக்கும். வலக்கை வலது முழங்காலிலும், இடக்கை அனந்தாழ்வான் உடலில் தாங்கிய படியும் இருக்கும். பின்புறத்திலுள்ள இரண்டு கைகளில் திருவாழியும் திருச்சங்கும் மொலிவு பெறும்.

வைகுண்ட நாதனைப் பொய்கையாழ்வார், பேயாழ் வார், திருமழிசையாழ்வார், பெரியாழ்வார், திருமங்கை யாழ்வார், நம்மாழ்வார் என்ற ஆறு ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர். பருவுடலுடன் பரம பதத்தை அடைய முடியாததால், இந்த எம்பெருமானை மானசீகமாகத்தான் சேவிக்க வேண்டும். இவன் தெற்கு நோக்கிய திருமுக மண்டலங்கொண்டு இருந்த திருக் கோலத்தில் சேவை சாதிக்கின்றான். தாயார், பெரிய

பிராட்டியார், ‘விண்ணகத்தாய்’ என்று பொய்கை யாழ்வாரும், வைகுந்தம் உறைவார்’ என்று பேயாழ் வாரும், வான் இருந்து...... ஆதிதேவன்’ என்று

r * “?

திருமழிசையாரும், வைகுந்தக் குட்டன் வாசுதேவன் என்று பெரியாழ்வாரும் இவனைக் குறிப்பிடுவர். நம்மாழ் வார் ‘அவன் மேவும் வைகுந்தம்’ என்றும், ‘வானத்து இருக்கும் தேவபிரான்” என்றும், விண்மீது இருப் பாய்’ என்றும் இந்த எம்பெருமானை இனங்காட்டுவர்

நம்மாழ்வார் ஒரு திருவாய் மொழிப் பாசுரத்தில் வைகுண்ட நாதனை அநுசந்திக்கின்றார்.

4. முதல் திருவந்-68 7. பெரியாழ். திரு. 8, 6 : 3 5. மூன் திருவந்-61, 8. திருவாய், 4, 1 : 1. 6. திருச்சந் விருத்-18 9. . 5. 3 : 9

1 0. . 6.9 : 4