பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைகுண்ட நாதன் 175.

‘தானோர் உருவே தனிவித்தாய்

தன்னின் மூவர் முதலாய வானோர் பலரும் முனிவரும்

மற்றும் மற்றும் முற்றுமாய்த் தானோர் பெருநீர் தன்னுள்ளே

தோற்றி அதனுள் கண் வளரும் வானோர் பெருமான் மாமாயன்

வைகுக் தன்னம் பெருமானே.”*

(தான் - ஒருவனாகி நின்ற தான்; ஒர் உரு - ஒர் உருவ முடையவன்; தனி - தனித்த க்ாரணன்; வித்து - உபாதான காரணம்; மூவர் - பிரமன், சிவன், இந்திரன்; பலர் - சேதநர்; மற்றும் - மானிட சாதி; மற்றும் - விலங்கு, பறவை; முற்றும்-எல்லாம்; தான்-சங்கல்ப்பத்துடன் கூடிய தான்; வானோர். நித்திய சூரிகள்; மாமாயன்-ஆச்சரியமான செயல் களையும் குணங்களையுமுடையவன்; வைகுந்தன்பரமபதநாதன்.)

பாசுரத்தில் ஆழங்கால்படுவோம். ‘தானோர் பெருநீர்... வானோர் பெருமான்’ என்பதில் சமஷ்டி சிருஷ்டியும் (தொகுதியான படைப்பும்), தானோர் உருவே...முற்று மாய் என்பதில் வியஷ்டி சிருஷ்டியும் (வேறு வேறு படைப்புகள்) சொல்லப்பெறுகின்றன. சாந்தோக்கிய உபநிடத வாக்கியத்தில் (6.2:1) ‘சதேவ’, ‘ஏகமேவ’, அத்விதியம்’ என்ற மூன்று சொற்றொடர்கள் உள்ளன. இவை முறையே துணைக் காரணம், முதற் காரணம், நிமித்த காரணம் தவிர வேறு இன்மையைக் காட்டு கின்றன. இந்த மூவகைக் காரணங்களும் எம்பெருமானே என்று கொள்ளவேண்டும். அதுபோலவே, இப்பாசுரத்தில் தான், ஓர், தனி என் மூன்று சொற்கள் (முதல் அடியில்) உள்ளன. இவற்றுள் தான் என்பதனால் முதற்காரணம்

AASAASAAAS 11. . 1, 5 : 4