பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 வடநாட்டுத் திருப்பதிகள்

இன்மையும், ஒர் என்பதனால் துணைக் காரணம் இன்மையும், ‘தனி’ என்பதனால் நிமித்தகாரணம் இன்மையும் பெறப்படுகின்றன. மூன்று காரணமும் இறைவனே என்பது அறுதியிடப் பெறுகின்றது. இதனை மேலும் விளக்குவோம். சூக்கும சித்து அசித்தோடு கூடியிருக்கின்ற தன்மையால் முதற்காரணமும், சங்கல்ப் பத்தோடு கூடியிருக்கின்ற தன்மையால் நிமித்த காரண மும், ஞானம் சக்தி முதலிய குணங்களோடு கூடியிருக் கின்ற தன்மையால் துணைக்காரணமும் ஆக மூன்று காரணங்களும் இறைவனே ஆவான் என்பது தெளிவா கின்றது. கம்பநாடனும் இக்கருத்தினையே, “உற்றொரு தனியே தானே

தன்கனே உலகம் எல்லாம் பெற்றவன்’ என்ற பாசுரத்தில் குறிப்பிட்டுள்ளது ஈண்டு ஒப்பு நோக்கி உணரத் தக்கது. ‘தானே தன்னந் தனியே சங்கற்பித்துத் தன்னுள்ளே உலகங்களையெல்லாம் தந்தவனான பரம் பொருள்” என்பது இதன் கருத்து. ஏழு நாட்கள் தவமி யற்றியும் வருணன் வாராதது கண்டு இராமன் சினங் கொள்ளலானான் என்று குறிப்பிடுமிடத்தில் இக்குறிப்பு வருகின்றது. இக்கருத்தையே வேறொரு முறையில் விளக்குவர் திருமழிசையாழ்வார்.

‘தன்னுள்ளே திரைத்துஎழும் தரங்கவெண் தடங்கடல் தன்னுள்ளே திரைத்துஎழுந்து

அடங்குகின்ற தன்மைபோல் கின்னுளே பிறந்து இறந்து

நிற்பவும் திரிபவும் நின்னுளே அடங்குகின்ற

கீர்மைகின்கண் நின்றதே”.

12. கம்ப. யுத். வருணனை-83 13. திருச்சந்.விருத்-10