பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37.8 வடநாட்டுத் திருப்பதிகள்

‘தானோர் பெருநீர்......... கண் வளரும் இப்படிப் படைப்பதில் ஒருப்பட்ட தான் தனக்கும் கண் வளர்ந்தரு ளுகைக்குத் தகுதியாகப் பரப்பையுடைத்தான ஒரு பெருங் கடலைத் தன் பக்கல் நின்றும் உண்டாக்கி அதனுட் கண் வளரும். இப்படிப் பெருங்கடலில் சாய்ந்தருளுகின்றவன் தான் யார்? என்னில்: இவன் நித்திய சூரிகட்குத் தலைவன். ஆச்சரியமான குணங்களையும் செயல் களையும் உடையவன். திருநாட்டைக் கொலுவீற் றிருக்கும் இடமாக உடையவன். அவன் என் தலைவன்’ என்கின்றார்.

இங்ஙனம் வைகுந்த நாதனைப்பற்றிய திருப் பாசுரத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில் திவ்விய கவியின் பாசுரம் நினைவிற்கு வருகின்றது. இடருடையேன் சொல்ல இ எளிதோ பிரமன் அடரும் விடையோற்கும் அரிதே-தொடரும் கருவ்ைகும் தம்பிறவிக்

கட்டறுத்து மீளாத் திருவைகுத் தம்பெறுவார்

இர் 14 இடர்-துன்பம்; பிரமன்-நான்முகன்; அடரும்-போர் செய்யும்; விடையோன்-எருதை G#Fasf உடைய சிவன்; தொடரும்-தொடர்ந்து வரும்; கருவைகும்-கருவில் நுழைவதற்குக் காரணமான; தம் பிந்வி கட்டு-தமது பிறவித் தளை, அறுத்துஒழித்து மீளா-திரும்பிவருதலில்லாத பெறுவ்ேர். இடையப் பெறுபவர்களின்; சீர்-சிறப்பு) s திருமாலோடும் சேர்த்து எண்ணப்படும் நான்முகன், சிவன் ஆகிய இருவராலும் வைகுந்த உலகினை அடைந்த முத்தர்களின் ப்ெருமையைச் சொல்ல முடியாதென்றால் சமு.சாரத்தில் உழிலும் ஆறிவுக் கேடனான என்னால் எவ்வாறு சொல்ல முடியும்?’ என்கின்றார் திவ்வியகவி.

1 திரும்.அந்-108