பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேங்கடம் மேவிய விளக்கு

வேழம் - யானை, பிடி-பெண்யானை, இருகண்இரண்டு கணுக்கள்; வண்ணன்-நிறத்தன்; வரைமலை}

என்ற சொல்லோவியமாகக் காட்டுவர். இத்தகைய ஒரு காட்சியைத் திருமங்கையாழ்வார் தி ரு ப் பி ரி தி ைய வருணிக்கும்போது இமயமலையில் காட்டுவர்.’ கம்ப நாடனும் சித்திர கூட மலையில் இத்தகைய காட்சி யொன்றினை மேலும் அழகு படுத்திக் காட்டுவன்.”

இன்னொரு யானையின் செயலைப் பொய்கையாழ் வார் புது முறையில் காட்டுவர். திருமலையின் கொல்லை களில் இராக்காலத்தில் யானையொன்று பட்டி மேய் கின்றது. ஒரு கையில் கொளுத்திய தீவட்டியும் மறறொரு கையில் அம்பு தொடுத்த வில்லையும் கொண்டு அந்த யானையைவெருட்டிச் செல்லுகின்றனர் குறமக்கள். இதனால் யானை வெருவியோடுகின்றது. ஆயின், எதிர் பாராத விதமாக அஃது ஒடும் வழியில் விண்ணினின்றும் எரிமீன் ஒன்று விழுகின்றது. யானை அதனை நட்சத்திரம் என்று ஓராது குறவர்கள் தம் தீவட்டியையே கீழெறிந்: தனர் என்று கருதித் திகைத்துக் கற்சிலைபோல் நின்று விடுகின்றது.

‘பெருவில் பகழிக்

குறவர்கைச் செக்தீ வெருவிப் புனந்துறந்த

வேழம்-இருவிசும்பில் மீன்வீழக் கண்டஞ்சும்

வேங்கடமே மேல சுரர் கோன்வீழக் கண்டுகந்தான்

குன்று.”

14. பெரி. திரு. 1.2:5 16. முதல் திருவந்-4815. கம், அயோத்-சித்திரகூட-10