பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேங்கடம் மேவிய விளக்கு II

திருமலையிலுள்ள ஐயறிவுடைய விலங்கு தன்னை வழி படும் ஞானத்தைத் தரக் கூடியவன் திருமலையப்பன் என்பது ஆழ்வார் நமக்கு உணர்த்தும் செய்தியாகும். இன்னொரு யானையின் செயலையும் அதன் முடிவையும் காண்போம். மதயானைபோல் எழுந்த மாமூகில்கான்’ என்று ஆண்டாள் வருணித்ததை நாம் அறிவோம். ஆண் யானையொன்று கரியமாமுகிற் படலத்தை எதிரி யானை என்று நினைத்துத் துதிக்கையைத் துக்கிக் கொண்டு வேகமாக ஒடிக் குத்துகின்றது. இதனைக் கண்ட யாளி ஒன்று அந்த யானையின்மீது பாய்ந்து ஓங்கி அறைந்து அதன் கொம்புகளை முறிக்கின்றது. யானையும் வாய்விட்டு பிளிறிக்கொண்டு மடிந்தொழி கின்றது. ஆயினும் யானை சினந்தணியாமல் அங்கேயே நின்ற வண்ணம் பெருமுழுக்கம் செய்து மலையையே அதிரவைக்கின்றது”. இப்படி ஒரு காட்சி.

பூதத்தாழ்வார் திருமலையிலே வாழும் வ்ானரங்கள் எம்பெருமானுக்குச் செய்யும் பூசனைகளைக் காட்டுவர்.

போதறிந்து வானரங்கள்

பூஞ்சுனைபுக்கு ஆங்கலர்ந்த போதரித்து கொண்டேத்தும்” [போது-விடியற்காலம்; சுனை-நீர் நிலை; ஏத்தும்

துதிக்கும்.)

அதிகாலையில் முனிவர்கள் துயில் விட்டெழுமாப் போலே குரங்குகளும் எழுந்து பூத்த சுனைகளிலே சென்று நீராடி அங்குள்ள செவ்வியப் பூக்களைப் பறித்துக்கொண்டு போய் ஏதேனும் ஒன்றைச் சொல்லித் துதிசெய்து பணிய்ா நிற்கும் என்கின்றார் ஆழ்வார். இதனை அடியொற்றிய்ே கம்பநாடன் சிந்திரகூடக் காட்சிகளை எ டு த் து க்

18. நாச். திரு-8:9 --------- 20. இரண். திருவத்-72 19. மூன், திருவந்-71