பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேங்கட மேவிய விளக்கு 13

மாகக் காட்டுவார்; இங்ஙனம் குறிஞ்சிநிலக் காட்சிகள் வழிவழியாகப் புதிய புதிய கற்பனைப் போக்குகளுடன் இலக்கியங்களில் புலவர்களால் காட்டப்பெற்று அறிவுக்கு விருந்தாக அமைகின்றன: தத்துவ ஞானியர் இந்த அசித்துக் காட்சிகளிலும் ஆழங்கால்படுகின்றனர்.

ஏழுமலையானின் சிறப்பு : திருமங்கையாழ்வாரும் நம் மாழ்வாரும் திருமலையின் இயற்கை எழிலும் மலையின் உயர்ச்சியிலும் ஈடுபட்டாலும் அங்குத் திருக்கோயில் கொண்டுள்ள இறைவன்பால் தம் மனத்தைப் பறிகொடுக் கின்றனர். பெரிய திருமொழியில் திருமங்கையாழ்வார் எம் பெருமானின் பெருமையைப் பலவாறு பேசி இனியவரா கின்றார். எம்பெருமான் பல்வேறு அவதாரங்கள் எடுத்து மக்களுக்காகச் செய்த பல்வேறு நற்செயல்களை எடுத்துக் காட்டி அகமகிழ்கின்றார். திருவேங்கட முடையான் குருந்தம் ஒசித்த கோபாலனாக வந்தவர்; கொக்கின் வடிவமாகப் பகாசுரனை வாய் பிளந்து வானுலகத்திற்கு அனுப்பிய வித்தகர்;’ கல்'நெஞ்சத்தை உடைய பூதனை யிடம் பாலமுதம் பருகியதுடன் அவள் உயிரையே குடித்த அற்புதச் செயலைப் புரிந்தவர்; கிருதயுகத்தில் வெள்ளை நிறத்தையும், கலியுகத்தில் கறுப்பு நிறத்தையும் துவாபர யுகத்தில் நீலமணி நிறத்தையும் கொண்டிருப்பவர்.” கண்ணனாக இருக்கும் பொழுது மருதிடைத் தவழ்ந்து நளகூபர மணிக்ரீவர்களின் சாபத்தை நீக்கிய பெருமை யுடையவர். குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்து ஆநிரைகளின் துன்பத்தைப் .ே ப ா க் கி ய வ ர் ?? பார்த்தனுக்குச் சாரதியாக நின்று தேரோட்டியவர்; ஆயர்பாடியில் கோபியருடன் குரவைக் கூத்து ஆடிய் கோவலர்.* மாணியாய்ச் சென்று மண்ணிரந்து கொண்

24. திருவேங்கட் மாலை என்ற நூலை நோக்கி அறிக. 25. பெரிய -1. 8 : 1. 27. பெரி. திரு-3.8: 3 26. பெரி. திரு-1. 8:2 28. . 1. 8: 4