பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேங்கடம் மேவிய விளக்கு #9

மேவிய விளக்கின்மீது-எண்னற்ற கதைகள், செவிவழிச் செய்திகள் எழுகின்றன. இவை தலபுராணத்திலும் இடம் பெற்று விடுகின்றன. சில தனிப்பாடல்களும் திருவேங்கட மலையைப் பற்றிப் புனையப் பெறுகின்றன. இவை மேலும் மேலும் மக்களிடையே பக்திச் சுடர் கிளர்ந்தெழுவதற்குக் காரணமாக அமைகின்றன. சில பாடல்கள் அழியா வாழ்வும் பெற்றுவிடுகின்றன. கூன்கொண்டு சென்றவன் கூன்நிமிர்ந்து ஓட,

குருடன் கொம்பில் தேன் என்று காட்ட, முடவன்

அத்தேனை எடுக்க, அயல் தான்நின்ற ஊமை எனக்கென்று

கேட்க தருவன்வரம் வான்நின்ற சோலை வடமலை

மேல்நின்ற மாதவனே!'49

என்பது அங்ஙனம் அழியா வாழ்வு பெற்ற ஒர் அழகிப் பாடல்: மக்கள் மனத்தில் மலைமேலிருக்கும் மாதவன் நிலையான இடம் பெற்றிருப்பது போலவே பக்திச் சுவை கிளர்ந்தெழச் செய்யும் இப்பாடலும் நிலையான இடம் பெற்றுவிட்டது. இன்று மக்கள் மனமாகிய தேசப் படத்தில் மலையின் பெயரும் மலையன் பெயரும்-நெடி யோன் குன்றமும் குன்றத்துக் கோயில் கொண்டுள்ள முகில் வண்ணனும்-அழியா வாழ்வு பெற்றுத் திகழ் கின்றன. திருப்பதியும் உலகத்திருத்தலப் பயணிகளின் பேரிடமாகத் திகழ்கின்றது.

இத்தனைச் சிறப்புகளுக்கும் காரணம் என்ன? திரு வேங்கடமுடையான்மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக் கையேயாகும். இந்த நம்பிக்கையைத் திவ்விய கவி பிள்ளைப் பெருமாள் அய்யங்கார்,

49. பழம் பாடல்