பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 வடநாட்டுத் திருப்பதிகள்

சதானே சரணமுமாய்த் தானே பலமுமாய்த்

தானே குறைமுடிக்கும்

தன்மையோன்-தேனேய்

திருவேங் கடந்தொழுதேம்

தீய விபூதிக்குள்

மருவோம்; கடந்தனெம்

வாழ்வு.”

|சரணம்-உபாயம்; பலம்-பயன்; தேன்ஏய்தேன் நிறைந்த தீய விபூதி-லீலா விபூதி; மருவேம்-பொருந்தமாட்டோம்; கடந்தனெம்கடந்து விட்டோம்).

என்று அழகாகக் கூறுவர். திருவேங்கடமுடையானை அடைவதற்கு அவனே உபாயமாக இருக்கின்றான்; அவனை அடைந்தவர்களுக்குப் பயனை அளிப்பவனாகவும் திகழ்கின்றான்; அவனை அடையவொட்டாமல் குறுக்கே வருகின்ற விரோதிகளையும் போக்குகிறவனாகவும் அமைந்து விடுகின்றான். இவன் வேண்டுவார்க்கு வேண்டுவன நல்கும் கலியுகவரதனாக இருப்பதால்தான் நாலா பக்கங்களிலிருந்தும் மக்கள் திரண்டு வந்து அவன் அருளாலே அவன் தாள் வணங்குகின்றனர். அவனும் குன்றின் மேலிட்ட விளக்காக இருந்து கொண்டு மக்களை தர்க்கின்றான். எண்ணற்ற அடியார்கள்-சைவர்கள், வைணவர்கள் உட்பட எல்லோரும்-நாள்தோறும் குவிந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் மனத்திற்குகந்த,

திருப்பதி மிதியாப் ப்ாதம்

சிவனடி வணங்காச் சென்னி இரப்பவர்க்கு ஈயாக் கைகள்

இனியசொற் கேளாக் காது

ml-l-l-l.i-mh , , , , , , திருப். அந் - 96